Copy
தினக்குரல்: முருக பக்தி மாநாடு முடிவடைந்தது
Sri Valli-Teyvanai Samedha Murugan

முருகப் பெருமானின் பெருமைகளைப்

பரப்பும் முருக பக்தி மாநாடு

மலேஷியா தினக்குரல் (கோலாலம்பூர், ஆகஸ்ட் 13, 2012)

லேஷியாவில் முருகன் பக்தி இலக்கிய மாநாடு திருமுருகன் திருவாக்குப் பீடம் முன் வந்து நடத்துவது ஒரு பெருமைக்கு உரிய விஷயமே. இது ஒரு புனித காரியம்.  இப்படிப்பட்ட தொண்டு செய்வதானது ஸ்ரீ முருகனுக்கு செய்யும் பெரிய தொண்டாகும். ஸ்ரீ முருகன் பற்றி சரிவர அறியாதவர்கள் கூட இம் மாநாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பல்வேறு நாட்டில் உள்ளவர்கள் முருகப் பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்று தொழிலதிபரான ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

மூன்றாவது நாளாக மலாய பல்கலைக் கழக பெர்டானா சிஸ்வா அரங்கில் நேற்று இரவு 7.00 நடைபெற்ற அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஓம்ஸ் தியாகராஜன் சிறப்பு உரையாற்றினார். இவரது தலைமையில் இரண்டு பக்தி நூல்கள் வெளியீடு கண்டது.

அழகன் முருகனின் இருவரும் தேவியார்' என்ற முதல் நூலை ஓம்ஸ் தியாகராஜன் பெற்றுக் கொண்டார். காவடி சிந்து எனும் காவடி பாடல்களை தொட்டு எழுதப்பட்டு வெளியீடு கண்ட முதல் நூலை மலேஷிய மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோ ஆர். எஸ்.

தனேந்திரன் பெற்றுக் கொண்டார்.
முருக பக்தி மாநாட்டில் வெளியீடு காண இவ்விரு நூல்களையும் ஈடுபாடுடன் ஓதி வந்தால் உலகத்தைப் பற்றியும், ஆன்மாவாகிய நம்மைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று திருமுருகன் திருவாக்கு பீடத்தின் பாலாகி சுவாமிகள் கூறினார்.

இம் மாநாட்டை மேலும் சிறப்பிக்க கர்நாடக இசைக் கச்சேரி, தனி புல்லாங்குழல் இசை, நடனக் கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகை புரிந்திருந்த 500 க்கும் முருக பக்தர்கள் இசை நடன வெள்ளத்தில் மூழ்கினர்.
First Muruga Bhakti Conference, Kuala Lumpur 2012
முருக பக்தி மாநாடு முடிவடைந்தது
குணா சுப்ரமணியம்/படங்கள் சூர்யா குமார் முருகன்
 
தமிழ் மொழி இறைவனின் மொழியாக இருப்பதை அனைத்துலக முருகன் பக்தி மாநாடு உறுதி செய்திருப்பதாக திருமுருகன் திருவாக்கு பீடத்தின் தவத் திரு பாலயோகி சுவாமி கூறினார். பலகாலமாக தமிழ் மொழிதான் இறைவனின் மொழி எனவும் கல்தோன்றா, மண்தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறி வந்துள்ளோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அதே வேளையில் மற்ற மொழிகளிலும் இறைவனை வணங்கலாம் என்றும் இந்த மாநாட்டில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறை வழிபாட்டிற்கு மொழி ஒரு தடையாக இருக்ககூடாது என்பதற்காக இது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அவர் சொன்னார். முருகன், வள்ளி, தெய்வானை என மூன்று கடவுட்களைப் போல டான்சி ஸ்ரீ குமரன் அறக்கட்டளை, தேசிய நிலநிதிக் கூட்டுறவு கழக அறக்கட்டளை, மலாய பலகலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல்துரை அறக்கட்டளை என மூன்று அறக்கட்டளைகள் தொடங்கப்பட உள்ளது. இது இந்திய சமுதாயத்துக்கு பெரிதும் உதவும் வகையில் அமையும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாலயோகி சுவாமி கூறினார்.

தென் ஆப்ரிக்காவில் இந்து மதத்தை விரிவு படுத்துவதற்கு பீடம் அமைப்பிற்கும் மலேஷியா இந்து சங்கம், திருமுருகன் திருவாக்குப் பீடம் உதவும் என்று அவர் சொன்னார்.

மலாய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறையும், திருமுருகன் திருவாக்குப் பீடமும் இணைந்து நடத்திய அனைத்துலக முருக பக்தி மாநாட்டின் நிறைவு விழாவில் தவத் திரு பாலயோகி சுவாமி பேசினார்.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வியாழர் கிழமை தொடங்கிய முருக பக்தி மாநாடு நேற்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாரபூர்வமாக நிறைவு கண்டது.

உலக முழுவதிலுமுள்ள முருக பெருமான் பக்தர்கள் இந்த நான்கு நாள் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 880 பக்தர்கள், 115 இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த அனைத்துலக முருகன் பக்தி மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஆர். எஸ். மகான் ஷான், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் டத்தோ நடராஜா, மலாயா பலகலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியன், முனைவர் மூ. ராஜேந்திரன், முனைவர் டான் ஸ்ரீ குமரன், டாக்டர் தியோ , மலேசிய மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோ. எஸ். தனேந்திரன் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp