Copy
சங்கத் தமிழில் திருச்செந்தூர்--பகுதி 1
Tiruchendur Senthil Andavar

சங்கத் தமிழில் திருச்செந்தூர்
(முருகன் கருவறைக் காட்சி)

பகுதி 1

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க!
என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்…
கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை;

இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்;
முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்;
உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்?

அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்;
மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:)
அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு ஞாபகம்;
சென்று வந்த பின்பும்…செந்தூரைச் சுற்றியே நினைவுகள்; கனவுகள்!

Tiruchendur Devasthanamஎந்த வேலையும் உருப்படியாப் பண்ண முடியல; கிளம்பும் போது Flight Return Journey பயணச் சீட்டு எடுத்துக்கிடாம, Onward Journey சீட்டு எடுத்துக்கிட்டு கிளம்புறேன்;
Egmore கிட்டக்க வந்த போது தான் உறைக்குது; வண்டியை மறுபடியும் வீட்டுக்கு விடு; அப்பா கிட்ட செம திட்டு:) தங்கச்சிக்கோ அந்தத் திட்டே லட்டு:)

ஒரு வழியா, அந்தச் செந்தூரை வச்சே, மீண்டும் Dosa-வில் துவங்குறேன்! நாளிடைப் பட்டமைக்கு மன்னிக்க!

Tiruchendur Devasthanam as it appears today
செந்தூர் – ஆலயம்

ஒங்களுக்குத் தெரியுமா? செந்தூர் முருகன், கடலுக்கு அடியில் தான் இருக்கான்; How many hands he has?
மேலே வாசிங்க!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் -ன்னு பேச்சு; அப்பறம் எப்படிய்யா கடலோரம்?:)

பத்துப் பாட்டுள் = முதல் பாட்டாய்த் திருமுருகாற்றுப்படை-யை வைத்துள்ளார்கள்;
நக்கீரர் எழுதியது; அந்தக் கால வழக்கத்துக்கு வித்தியாசமாய் எழுதியது;
நாடாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தாமல், மனசாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தும் நூல்!

அது கடைச் சங்க காலத்தின், கடைக் காலம்;
வடமொழிக் கலப்பு, அரசியல் ரீதியாக நன்கு நிகழ்ந்து விட்ட காலம்;
கந்து-நடுகல்-பெருந்தெய்வமான தமிழ் முருகன்…
இயற்கைக்கு மாறாய், 6face/12hands என்றெல்லாம் புராணம் கலந்து விட்ட காலம்!

ஆனால், நக்கீரர், இரண்டையும் ஒளிக்காது மறைக்காது காட்டுகிறார்;
* மறைக் காதுள்ள அந்தணர் உள்ள சுவாமிமலையும் காட்டுவாரு
* மறைக்காது, ஆடு பலி குடுத்துப் பூசிக்கும் பழமுதிர்சோலையும் காட்டுவாரு

முன்பே ஒரு முறை, முருகாற்றுப்படையை #dosa வில் பார்த்துள்ளோம்..
வெள்ளை அலைகள் வந்து தாலாட்டும் காட்சி!
இன்று தாலாட்டும் காட்சி அல்ல, கருவறைக் காட்சி; This song is all about hands = கை உள்ள Guy!

Sri Subrahmanya Devasthanam, Tiruchendur

friend on Facebook | forward to a friend 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp