Copy
அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு

அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு

எழுதியவர் திருமதி உமா பாலசுப்பிரமணியன்

பூத வேதாள வகுப்பு

Arunagirinatharஅருணகிரிநாதர் தந்த திருப்புகழ்ப் பாடல்கள் தாளவகை இலக்கியமாகவே திகழ்கின்றன. திருப்புகழ்ப் பாடல்களைப் போல அருணகிரியார் படைத்த 18 திருவகுப்புப் பாடல்களும் இசை இலக்கியங்களாக உள்ளன. வடமொழியிலும், தமிழிலும் தாள இலக்கணங்கள் கூறும் நூல்கள் உள்ளன. இத்தாளங்களுக்குரிய இலக்கியமாகத் திருப்புகழ்ப் பாடல்களே விளங்குகின்றன. இந்நூல் இல்லையேல் இத்தாளங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன. இவை வெறும் கற்பனையா? என்று வினா எழும். இவரது படைப்புகள் இசைத்தமிழுக்குரிய வற்றாத சுரங்கமாகும்.

திருவகுப்புப் பாடல்களுள் ஒன்று பூதவேதாள வகுப்புப் பாடலாகும். இதில் பூதவேதாளங்கள் ஆடும் நடனம், பாடும்பண், இசைக்கும் இசைக்கருவிகள் ஆகியவற்றைக் கூறியுள்ளார். இவை கையினால் சச்சபுட, சாசபுட, சட்பித, கண்ட, சச்சரி, மட்டிசை போன்ற தாளங்களைப் போடுகின்றன. வராளி, சிகண்டிகை, சீகாமரம், விபஞ்சிசை, பயிரவி, கைசிகை, மலகரி, பவுளி, தனதனாசி, குறிஞ்சிபோன்ற பண்களைப் பாடுகின்றன என்கிறார்.

1) தொங்கல் இசை இலக்கிய வகைக்குரிய இசை இலக்கியமாகத் திகழ்கிறது. “பெருமானே”, “தம்பிரானே”, குமரவேளே” என்ற தொங்கல்கள் பாடல்களில் உள்ளன.

2) சந்தப் பாடல்களின் இலக்கியமாக உள்ளன. சந்தமறியாமல் பாட இயலாது. பாடலின் அடிநாதமாகச் சந்தம் விளங்குகிறது.

தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன - தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோது.

3) மும்மை அலகு (திஸ்ரம்) நான்மை அலகு (சதுச்ரம்), ஐம்மை அலகு (கண்டம்), ஏழுமை அலகு (மிச்ரம்), ஒன்பது அலகு (சங்கீர்ணம்) என்ற தாள வகைகளுக்கு எடுத்துக் காட்டான பாடல்கள் பல உள.

4) சந்தத் திருப்புகழ்ப் பாடல்கள் பல உள. முன்பு அமைந்தது போல ஒரு தாள நடையில் அமையாமல் பல நடைகளில் வருவன பல உள.

மயில் நடனக் காட்சி

5) மயில் நடனக் காட்சிக் கேற்ற வகையில் ‘அகரமுமாகி’ (பா. 441) அமைந்துள்ளது. இதில்

செக கண சேகு தகுதிமி தோதி
திமி யென ஆடு - மயிலோனே

என்று மயில் நடன ஒலி ஜதியோடும், இசைச் சுரங்களோடும் பாடப்பட்டுள்ளது.  

Uma Balasubramaniyanஉமா பாலசுப்பிரமணியன்,
சென்னை.
கை பேசி எண் -- 9962608538
மின்னஞ்சல் முகவரி --  uma_kbs@yahoo.com

'அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு' என்ற இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் தனது தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிகுந்தவர். இவர் திருப்புகழில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருவதோடு திருப்புகழை இசை வழி பயிற்றுவிப்பதிலும் மிக்க திறமையும் ஆர்வமும் உடையவர்.
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp