Copy
பாம்பன் ஸ்வாமிகள்--பகுதி 3
Pamban Swamigal

பாம்பன் ஸ்வாமிகள்

பகுதி 3: அதிசயங்கள்

Pamban Swamigal

எழுதியவர்: வீ.எஸ். கிருஷ்ணன்

தமிழில் மொழிபெயர்ப்பு: தி. ரா. பட்டாபிராமன்

 

அதிசயங்கள்

 
அவர் வாழ்வில் பல அதிசயங்களை
முருகன் நிகழ்த்தினான் 
 
அவரை வழி நடத்தினான்
ஒவ்வொரு கணத்திலும் 
 
மாயையில் சிக்கி தவிக்கும்
மக்களுக்கு அவர் வழி காட்ட
அவர் வாழ்வில் முருகன் நடத்திய
லீலைகள் சில காண்போம் இப்போது
 
திருசெந்தூரில் கவுண்டர் மண்டபத்தில்
சில பாகவதர்கள் பாம்பன் சுவாமிகளின்
பாடலான பரிபூஜன பஞ்சாம்ரித்த வண்ணம்
அங்கு கூடியிருந்த பக்ஹர்கள் முன்னிலையில்
மெய்மறந்து பாடிகொண்டிருந்தனர்
 
காற்றில் முருகனின் 
பெருமைகள் நிறைந்து 
இன்னிசையாய் ஒலிக்க
பக்தி வெள்ளத்தில்மூழ்கியிருந்த
மக்களின் கண்களில் அங்கே மண்டப தூணின் 
ஓரமாய் நெற்றியில் திருநீறு துலங்க 
பகலவன் போல் ஒளி வீசும் முகத்துடன் 
நின்றுகொண்டு பாடலை ரசித்து 
கேட்பதை கண்ணுற்றனர்
.
காணும்போதே அங்கிருந்து மறைந்தனன்
அச்சிறுவன் அங்குள்ளோரை
வியப்பில் ஆழ்த்திவிட்டு.
 
முருகனே வந்து நின்று
அருள் செய்தான் என்று
அகமகிழ்ந்தது
அங்கு கூடியிருன்ந்த
அடியார் கூட்டம்
 
காஞ்சிபுரம் சென்றார் ஸ்வாமிகள்
கேட்ட வரங்களையும் 
கேளாது வளங்களையும் ஒருங்கே தரும் 
கருணைக்கடலான அத்திகிரி அருளாளன் வரதராஜ பெருமானை கண்குளிர தரிசித்தார்.
 
கம்பத்தில் உதித்து ஹிரணியனை கொன்று பிரஹலாதனை காத்தவனும் 
ஈஸ்வரனும் ஒன்று என்று என தோன்றும்
ஏகாம்ப ஈஸ்வரரையும்
தரிசித்து காமத்தை அழித்து
ஞானத்தை அளிப்பவளாம்
அன்னை காமாஷியையும் தரிசித்தார்.
அங்கிருந்து புறப்பட்டார் 
ரயிலடிக்கு அவ்வூரை விட்டு செல்ல
 
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது
ரயிலடியை நெருங்கும்போது
ஒரு இளைஞன் எதிர்ப்பட்டான் 
 
அய்யா இவ்வளவு தூரம் வந்தீரே 
கந்த புராணம் பாடி அருளிய
கச்சியப்ப சிவாசாரியார்
வழிபட்ட குமார பெருமான் 
 உறையும் குமார கோட்டத்தை 
கண்டு வணங்காது செல்லலாமா என்றான்
 
இளைஞனே விருப்பம்தான் 
நேரமாகிவிட்டதே நான் ரயில் வண்டியை பிடிக்கவேண்டுமே என்றார் ஸ்வாமிகள் அவனிடம் 
வண்டியை விட்டுவிட்டால் 
நான் எங்கு தங்குவது என்றார்
 
முருகனின் பக்தனே
நீ குமரனை வணங்காது
இவ்விடத்தை விட்டு செல்வது முறையாமோ என்றான் அந்த இளைஞன் மீண்டும் அவரிடம் 
 
அது உன்னைப்போல்
ஒரு முருக பக்தனுக்கு தகுமோ
என்றான் அந்த இளைஞன் 
 
வாருங்கள் உங்களுக்கு விரைவில் அவன் தரிசனம் 
பெற வழி செய்கிறேன் என்று அழைத்து சென்றான் இளைஞன் வடிவில் வந்த குமரன்
 
அவன் வார்த்தையை தட்ட இயலாத ஸ்வாமிகள் 
தன்னைஅறியாது அவன் பின் சென்றார்
கோயில் அருகில் சென்றதும் மறைந்துவிட்டான் 
அந்த இளைஞன்
 
இதயத்தில் இன்பம் போங்க குமரனை கண்டார் 
தரிசித்தார் உள்ளம் நிறைந்தது உவகையினால்.
ரயிலடி விரைந்தார் வண்டியை பிடிக்க
 
இந்த லீலையை படிக்கும் நமக்கெல்லாம் கூட 
முருகன் அருள் செய்த விதம்
இன்பத்தில் ஆழ்த்துகிறது அல்லவா 
என்னே பக்தர்கள் மீது 
முருகன் காட்டும் கருணை.
 
அவர் நினைத்தார்
தான் கோயிலுக்கு சென்று வருவதற்குள்
ரயில் வண்டி வந்து சென்று விடும் 
தான் அன்றிரவு ரயில் நிலையத்திலேயே 
காலத்தை கழிக்க வேண்டும் என்று
 
ஆனால் முருகனின் லீலை
வந்த வண்டி அங்கேயே 
நின்றுகொண்டிருந்தது
ஸ்வாமிகள் கோயிலுக்கு 
சென்று திரும்பி வரும் வரை
ஸ்வாமிகள் வண்டியில் ஏறிய
பின்தான் அங்கிருந்து புறப்பட்டது.
 
இப்படி பக்தர்கள் மேல் 
கருணை உள்ளம் கொண்ட முருகனை
வணங்காமல் வாழ்நாளை கழிக்கலாமா?
வணங்கி அவனருள் பெற்று வாழ 
முயற்சி செய்யாமல் இருக்கலாமா 
மானிடரே சிந்திப்பீர்.
 
துறவறம் ஏற்றல் 
 
ஸ்வாமிகள் 1895 ஆம் ஆண்டு துறவறம் ஏற்றார் 
கனவில் வந்த குகன் அவரை சென்னைக்கு 
பயணிக்க கட்டளையிட்டான்
 
கனவிலிருந்து விழித்தெழுந்தார் ஸ்வாமிகள்
சென்னைக்கு எவ்வாறு செல்வது எங்கேதங்குவது
தன் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வது
என்றெல்லாம் கவலைபட்டார் இறைஅருள் பெற்ற நிலையிலும்
 
முருகனின் ஆணைக்கு அடிபணிந்த ஸ்வாமிகள்
அவன் செயல் போல் நடக்கட்டும் என்று முடிவெடுத்து
எக்மோருக்கு ஏகினார் புகைவண்டி மூலம்
 
வண்டியைவிட்டு இறங்கியதும்
ஒரு வண்டிக்காரன் அவரை தன் 
வண்டியில் ஏற்றிக்கொண்டு 
ஜார்ஜ் டவுனில் உள்ள வைத்யநாத 
முதலிதெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கொண்டு சென்று அவரை இறங்க சொன்னான் 
 
அவர் வண்டியை விட்டு இறங்கியதும் அவ்வீட்டின் அம்மணி பங்காரு அம்மாள் என்பவர் அவரை வரவேற்று முருகபெருமான் தன் கனவில் தோன்றி சுவாமிகளை வரவேற்று இருக்க இடம் தந்து ஆதரிக்குமாறு பணித்ததாக கூறியதை கேட்டு முருகனின் கருணையை நினைத்து நெஞ்சுருகினார் ஸ்வாமிகள்

உலக வாழ்வை நீத்தல்
 
1894 ஆம் ஆண்டு மயானத்தில் 
ஒரு இடம் தேர்ந்தெடுத்தார் ஸ்வாமிகள்
 
குழியை வெட்டி அதில் அமர்ந்துகொண்டு முருகனை குறித்து தியானம் செய்ய தொடங்கினார் 
 
பகலும் இரவும் மாறி மாறி செல்ல ஊன் உணவினை மறந்து ஆறு நாட்கள் தவம் தொடர்ந்தது ஏழாவதுநாள் ஒரு குரல் கேட்டது
அவர் செவியில் இப்புவியில் பிறவியெடுத்த உனக்கு அருள் செய்ய நான் வந்துவிட்டேன் என்ற குரல் அவர் செவியில் தெளிவாக கேட்டது
 
குரலை கேட்ட சுவாமிகள் கண்ணை திறந்தார் 
கண் முன்னே காட்சி தந்தான் கந்தன்
அவனிடமே உபதேசம் பெற்றார்
 
தொடர்ந்து 35 நாட்கள் தவத்தினை
தொடர்ந்தார் அந்த குழியிலே 
35 வது நாள் முருகன் ஆணையிட்டான்’
தவமிருந்தது போதும்
தவம் பலித்துவிட்டது உன் பவம்
நீங்கிவிட்டது குழியை விட்டு வெளியே வா என்றான்
 
கோவணாண்டியாய் குழியை விட்டு வெளியே வந்த
சுவாமிகளுக்கு சுற்றி நின்ற அடியார் குழாம்
வெள்ளாடையை தந்தது அணிந்துகொள்ள
 
தொடர்ந்து வாரணாசியில் உள்ள குமரகுரு ஆஸ்ரம ஸ்வாமிகள் பாம்பன் ஸ்வாமிகள் அனைத்தையும் துறந்ததை வெளிக்காட்டும் காவி உடையை
அணிந்திட செய்தார்.
 
தம்புசெட்டி தெருவில் சுவாமிகள் வசித்தபோது ஒரு விபத்தில் கால் முறிந்த நிலையில் மருத்துவர்கள் அவர் காலை எடுத்திட முடிவு செய்தனர்.
பக்தர்கள் பக்தியுடன் பாராயணம் செய்தனர் ஸ்வாமிகள் இயற்றிய ஷண்முக கவசம். முருகனருளால் கால் எலும்புகள் கூடிவிட்ட அதிசயத்தை கண்டு
இன்றும் முருக பக்தர்கள் முருகனின் கருணையை நினைத்து போற்றி புகழுகிரார்கள்.
 
ஸ்வாமிகள் இவ்வுலகில் வாழும் காலம் முடிவு பெறுவதை உணர்ந்து கொண்டார் 
 
சின்னஸ்வாமி ஜோதிடர் என்பவரை அழைத்தார்
 
திருவான்மியூரில் அவர் அடங்க இடம் வாங்க செய்தார் 
பக்தர் கூட்டம் புடை சூழ
30 மே 1929 ஆம் ஆண்டு சமாதியில் அமர்ந்து 
முருகனின் ஒளியில் கலந்துவிட்டார் ஸ்வாமிகள்.
 
Pamban Swami Samadhi, Tiruvanmayur
Pamban Swamigal Samadhi, Tiruvanmayur
 
அவர் பூவுடல் நம் கண்ணை விட்டு மறைந்தாலும்
அவர் இயற்றி தந்த முருகன் புகழ் பாடும் பாடல்கள் துன்பத்தில் உழலும் மாந்தர்களுக்கு
துன்பம் நீக்கி இன்பம் அருளும் பணியை செய்துகொண்டிருக்கின்றன 
.
என்றோ வாழ்ந்து மறைந்த
முருகனடியார்களை போல் அல்லாது
சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்து 
முருகபக்தியில் திளைத்து அவர்சென்ற வழியை நமக்கெல்லாம் போதித்து முருகனடி சேர்ந்த 
பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரம் 
படிப்போர் மனம் குழப்பம் நீங்கி தெளிவு
பெறும் என்பதில் ஐயமில்லை.
 
பாம்பன் ஸ்வாமிகள் திருவடிகளை 
அனுதினம் நினை மனமே 
அவர் அருளிய முருகன் 
போற்றிகளை படி தினமே 
உன் உள்ளத்தில் தோன்றும் 
சஞ்சலங்கள் யாவும் 
மறைந்திடும் அக்கணமே 
Kumarasthavam
ஓம் சரவணபவ 
ஓம் கந்தா 
ஓம் முருகா 
போற்றி போற்றி


friend on Facebook | forward to a friend 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp