Copy
பாம்பன் ஸ்வாமிகள்--பகுதி 1
Pamban Swamigal

பாம்பன் ஸ்வாமிகள்

பகுதி 1

Pamban Swamigal

எழுதியவர்: வீ.எஸ். கிருஷ்ணன்

தமிழில் மொழிபெயர்ப்பு: தி. ரா. பட்டாபிராமன்

பாம்பன் ஸ்வாமிகள் என பெயர்வர காரணம்என்ன?
 
பாம்பின்மீதுபள்ளிகொண்டவன்யார்? 
 
அவன்தான்அந்தபரந்தாமன் அந்தமாலின்மருகன்தானேமுருகன்
 
அந்தமுருகனைதுதித்துஅவன்தரிசனம்கண்டு
அருணகிரிநாதரைபோல் 
அவனைபாடிஅவனின்பெருமைகளை 
அவனியில்உள்ளோர்க்குஉணர்த்தி 
சமீபகாலத்தில்வாழ்ந்துஅவனுடன் 
அயிக்கியமானவர்தான்பாம்பன்ஸ்வாமிகள்
 
பரமனின்மைந்தனை 
 
பழனிமலைமேல்ஆண்டி
கோலத்தில்நின்று
 பாரிலுள்ளமாந்தரின்மனம், உடல், பிறவி
 பிணிபோக்கியருள்வானை 
 
சினம்அடங்கிசிந்தைதெளிந்தால்தான்
முருகனருள்கிட்டும்என
உணர்த்தியதணிகைவள்ளலை 
 
மருதமலையில்நின்றானை 
மறலியைவென்றானை, பக்தர்களின்
மனம்கவர்ந்தானை 
 
ஞானம் பெறவும் தரவும்
வயது தடையல்ல என 
உலகோர்க்கு உணர்த்தருளிய 
சுவாமிநாதனை
 
இச்சா சக்தியம் 
ஞான சக்தியும்
இணைந்து நின்று வணங்கிடும் 
அடியார்களுக்கு இன்பம் தந்து 
இடர் நீக்கி காட்சி தரும்
பரங்குன்றானை
 
விராலிமலையில் நாடி வரும் 
பக்தருக்கு வினைகளை நீக்கி 
அருள் செய்யும் விமலனை 
 
செந்தூர் வயலில் அகந்தையின் வடிவாம் 
சூரனை வதைத்து ஆட்கொண்டு 
நாடி வரும் பக்தர்களை
 காக்கும் வடிவேலனை 
 
தன் அடியார்களின் துயர் தீர்ப்பானை
 தயாபரனை ஞானபண்டிதனை 
துதித்து பாக்களால் பாடி 
அவன் தரிசனம் கண்டு 
திருவான்மியூரில்
அன்னை மடியில் மோன தவத்தில் 
ஆழ்ந்திருக்கும் 
பாம்பன் சுவாமிகளை போற்றுவோம் 
 
நாடி வந்தோருக்கெல்லாம் 
நல்வழிகாட்டி.
வினை போக்கி வேலவனின்
 மகிமையை உணர்த்தி 
நம்மையெல்லாம் காக்கும் 
கருணை கடலை 
நெஞ்சார வாழ்த்தி 
நித்தம் நித்தம் 
அவர் புகழ் பாடுவோம்
 
பற்றுகள் நீங்கி பரமனின் 
அருள் பெற வழி காட்டும் 
 பாம்பனடி
போற்றி போற்றி போற்றி.

தைப்பூச நன்னாளில்
ஆயிரமாயிரம் பக்தர்கள்
காவடியை தோளில் சுமந்து
முருகனை நெஞ்சில் நிறுத்தி
ஹரோ ஹரா என்ற நாமம் நாவில் ஒலிக்க
பழனியை நோக்கி படையெடுப்பார்
பாதயாத்திரையாய் தம்
அன்பு தெய்வமாம் முருகனை காண
 
இறைவன் நமக்களித்த இந்த வாழ்க்கை 
பயணம் முருகனின் தாமரை பொற்பாதங்களை அடைவதற்கே
பயணத்தின் பாதையிலே நம்மை திசை திருப்பி 
படுகுழியில் தள்ளும் பாதகர்கள் பல உண்டு
வேலுண்டு பயமில்லை என்பவர்க்கு வேறு துணை எதற்கு ?
யாமிருக்க பயமேன் என்ற முருகனின் அபயக்கரம்
இருக்க வீணான மனக்குழப்பம் வரலாமோ ?
 
விழிக்குத்துணை நின் மென்மலர்ப்பாதங்கள்
என்று கந்தரலங்காரம் பாடிய
அருணகிரியாரின் வாக்கு பொய்யாமோ ?
 
முருகனை நோக்கிய நம் ஆன்மாவின் பயணம்
இனிதே நடைபெற நல்லதோர் வழியை
காட்டி தந்தனர் பல மகான்கள்
பக்தியை தூண்டினர் சிலர்
சிலர் சரியான பாதையை காட்டினர்
இன்றும் உதவுகின்றனர் உண்மை பக்தர்களுக்கு
 
அன்னாரின் சரித்திரம்
அற்புதங்கள் நிறைந்தது
 
சாத்தப்ப பிள்ளைக்கும் செங்கமல்முத்து அம்மாளுக்கும் ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் என்னும் கிராமத்தில் 1848 ஆம் ஆண்டில் அவதரித்தார் பின்னாளில் பாம்பன் ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட அப்பாவு
 
கல்வி கற்றதும்
தென்னந்தோப்பிலே காலம் கழிந்தது 
 
அருணகிரிநாதரின் திருப்புகழ் அமிர்தத்தை 
பருக நேர்ந்தது அவருக்கு 
 
படிக்க படிக்க அந்த ஞான கருவூலத்தில் 
ஆழ்ந்து போனார் 
 
அந்த பாடல்களில் 
மனதை பறிகொடுத்தார்
 மயங்கினார் பாடி பாடி
முருகனை துதித்தார்.
அதில் இன்பம் கண்டார்
 
திருப்புகழை இயற்றிய
அருணகிரி பெருமானை
தன் மானசீகக் குருவாக ஏற்றார்
 
அல்லும் பகலும் முருகனின்
வடிவம் முன் நின்று
அவனை துதித்தார்.
 
தன் மானசீக குருவைப்போல் 
தானும் பாக்களை இயற்றும்
வல்லமைபெற
முருகப்பெருமானை வேண்டினார் 
 
உள்ளம் உருகும் அடியார்களின் அல்லல் தீர்ப்பவனல்லவோ முருகன் 
 
முருகன் அவரை ஆட்கொண்டான் 
அவரும் முருகனின் புகழ் பாடும்
பாக்களை இயற்ற தொடங்கினார்
 
இதயத்தில் அன்பு பெருக்கெடுத்து
முருகனை நோக்கி வழிந்தோடினால்
ஓடிப்போவானோ அந்த முருகன்?
தேடி வந்து ஆட்கொள்ள நினைத்தான்
தன் பரம பக்தன் அப்பாவுவை
 
முருகன் புகழை
பறை சாற்றும்
பதிகங்கள் அப்பாவுவின்
உள்ளத்தில் ஊற்றெடுத்தது
 
அருணகிரியாரின் திருப்புகழின்
சங்கனாதம்போல் 
சந்தங்களாக 
ஒலிக்கதொடங்கியது
 
ஒவ்வொரு பாடலிலும்
தன்மானசீக குருவான
அருணகிரிநாதரை மறவாது
மேற்கோள் காட்டியே
பாடலை புனைந்தார் அப்பாவு 
 
கங்கையை சடையில் தரித்து 
என்ற முதற்ப்பாடல்
முருகனின் தந்தையாம் 
ஈசனின் மீது பிறந்தது
 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
பாடல் பாடி 
முருகன் திருவடியில் சமர்ப்பித்தார்
 
முருகன் மீதும் தன் குரு மீதும்
பித்து கொண்ட அப்பாவு
 
பாடலின் முடிவில்
தன்குரு அருணகிரினாதரின் பெயரோடு
நிறைவு செய்தார் 
குரு நன்றி மறவா அப்பாவு
 
அப்பாவு இயற்றிய பாடல்களில் 
பொதிந்து கிடக்கும் 
ஞான கருவூலத்தை கண்ணுற்றார்
ஸ்ரீ சேதுமாதவையர் என்னும் மகான்
 
விஜயதசமி நன்னாளில்
அன்னாருக்கு மந்திர 
உபதேசமும் தீஷையும் அளித்தார்.
 
பின்னாளில் அப்பாவு
பாம்பன் ஸ்வாமிகள்
என அழைக்கப்படலானார் 

Appavu receives upadesam from Seddu Madhava Iyer
Appavu receives upadesam at Agni Tīrtham near Rameswaram temple
குலம் தழைக்க மகனுக்கு மணம்
முடிக்க நினைத்தனர் பெற்றோர்
மகனின் ஆன்மீகத்தில் நாட்டம்கண்டு 
மணமுடிக்க மகன் மறுத்திடுவானோ அஞ்சி 
குருவின் உதவியை நாடினர்
 
குருவின் ஆணைக்கிணங்க
தன் 25 வது வயதில்
கிளிமுத்தம்மாள் என்னும் 
கன்னிகையை மணந்து
இல்லற தர்மத்தை ஏற்றார் 
 
கணவனின் ஆன்மீக வாழ்கைக்கு
இடையூறின்றி 
இல்லறம் நடத்தினாள்
கணவனின் கையை பிடித்தவள் 
 
மகனிரண்டும் மகள் 
ஒன்றும் பிறந்தன 
 
சிறிதுகாலம் வாழ்க்கை
இன்பமயமாய் ஓடியது.
 
வாழ்வில் துன்ப மேகங்கள் 
சூழ தொடங்கின 
துன்பத்தின் மேல்
துன்பம் துவண்டது உடல் 
 
அனைத்து துன்பங்களிலிருந்தும்
ஆனால் அவரை நிழல்போல் 
காத்து நின்றான் முருகபெருமான் 
 
சென்னைக்கு வந்தார்.
தாயின் மறைவையும்
தமையநின்மகன் மறைவையும்
முன்பாகவே அறிந்துகொண்டார்.
 
அவர் மனம் பக்குவப்பட்டுவிட்டதால்
பந்தங்களிலிருந்து விடுபட்டுவிட்டு
மனதில் சோகம் எழாமல்
தன் ஆன்மீக பணியை தொடர்ந்தார்.
 
சுபம் சுபம் சுபம்


friend on Facebook | forward to a friend 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp