Copy
தொண்டு கொண்டு அருள்வாய்
View this email in your browser
Tiruttani Sri Subrahmanya Swami
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tirichendur.org
Tirichendur.org
Kataragama.org
Kataragama.org
YouTube
YouTube
Pinterest
Pinterest
தொண்டு கொண்டு அருள்வாய்
சிவபாதசேகரன்


செல்வந்தர்களில் எல்லோருக்குமே பரோபகாரம் செய்யும் எண்ணம் ஏற்படுவதில்லை. நாம் சம்பாதித்ததைப் பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற சுய நலம் தடுப்பதால் ஏற்படுவதே காரணம். தானாக மனமுவந்து பிறரைத் தேடிச்சென்று கொடுக்க முன் வராவிட்டாலும், தன்னிடம் உதவி தேடி வருவோருக்காவது உதவலாம் அல்லவா? பிச்சைக் கார்களைப் போ என்று விரட்டுவார்கள். மற்றவர்களை நாசூக்காக ஏதாவது சொல்லி அனுப்பி விடுவார்கள். தன்னிடம் உள்ள செல்வம் பிறருக்கு உதவுவதற்கே இறைவன் தந்தது என்ற எண்ணமே இவர்களுக்கு ஏற்படுவதில்லை. "இரப்பவர்க்கு  ஈய  வைத்தார்"  என்கிறார் அப்பர் பெருமான். செல்வம் இருந்தும் கொடுக்காதவர்களுக்குக் கடுமையான நரகங்கள் காத்திருக்கின்றன என்பதை,  "கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்" என்கிறார் அவர்.

மானுட உடலின் நிழல் வெய்யிலுக்கு ஒதுங்கக் கூட உதவாது. கடைசிக்காலத்தில் கையிலிருந்த பொருளும் கூட வராது. ஆகவே, வடிவேலனை வாழ்த்துங்கள். வறியவர்களுக்கு நொய்யில் ஒரு சிறு பகுதி அளவாவாவது கொடுத்துத் தருமம்  செய்யுங்கள். அதுவே நீங்கள் ஈடேற வழி என்று கந்தர் அலங்காரத்தில் உபதேசிக்கிறார் அருணகிரிநாதப்பெருமான்.

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல்
கையில் பொருளும் உதவாது காண் நுங் கடை வழிக்கே.    


முகஸ்துதி செய்தாலாவது செல்வந்தர்கள் மனமிரங்கி உதவுவார்கள் என்று எண்ணி அவர்களைப் பலப் பலவாகப் புகழ்ந்தாலும் அக்கல்  நெஞ்சக்காரர்கள் உதவ மறுக்கிறார்கள். எனவே அப்படிப்பட்டவர்களைப் பாரியே என்று புகழ்ந்தாலும் பயனில்லையாதலால் திருப்புகலூர் இறைவனைப் பாடுங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் வாரி வழங்கும் வள்ளல் அவன் என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.

திருப்பரங்குன்றத்துத் தெய்வானை மணாளனைப் பாடுகையில் அருணகிரியார் இதே கருத்தை நமக்கு வழங்குகிறார். தாமரைக்கு நீர் தரும் மழை மேகம் போலவும் தமிழ்ப்புலவோருக்குத் தஞ்சமளிக்கும் கொடையாளி போலவும் இருப்பதாக உலகத்திலுள்ள தனவந்தரைப்  புகழ்ந்தும் பயன் ஏதும் இல்லை. மனம் தளர்ந்து உள்ளம் புண் படுவதே எஞ்சுகிறது. கயிற்றால் செலுத்தப்பட்ட பம்பரம் சுழன்று விட்டு இறுதியில் தளர்ந்து நிற்பதைப் போலாகி விடுகிறது. பஞ்ச இந்திரியங்களால் அலைக்கப்பட்டுத்  துன்ப வாழ்க்கையை அனுபவிக்கும் இவ்வுடலை நீயே நற்கதி அடையச் செய்ய வேண்டும். ஒரு கண நேரத்தில் அதனைத் திருத்தி ஆட்கொண்டு உனது தண்டை அணிந்த கழலடிக்குத் தொண்டு புரியச் செய்ய வேண்டும்.அந்த வரத்தை முருகா,நீ தந்து அருளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அருணகிரியார்.

பரம் பொருப்பில் (பரங் குன்றில்) உறைவோனே, படைத்தலைப் பிரமனும்,காத்தலை விஷ்ணுவும்,அழித்தலை ருத்திரனும், செய்யப்பணித்து,தனி வேலேந்திய தெய்வ சிகாமணியே, கங்கா புத்திரனே, புனம் காத்த வள்ளிப் பிராட்டியை  செங் கரத்தால் கும்பிடும் பெருமானே, உனது கழலுக்குத் தொண்டு கொண்டு அருள்வாயே என்று திருப்புகழில் துதிக்கிறார். அந்த அருமையான பாடலைப் பாடி நாமும் பரங்குன்றத்துப்பெருமானிடம் வேண்டுவோம்.   

"தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்; தண்
தமிழ்க்குத் தஞ்சம் என்று உலகோரைத்
தவித்துச் சென்று இரந்து உளத்தில் புண் படும்
தளர்ச்சிப் பம்பரம் தனை ஊசல்
கடத்தைத் துன்ப மண் சடத்தைத்  துஞ்சிடும்
கலத்தைப் பஞ்ச இந்திரிய வாழ்வைக்
கணத்தில் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டு கொண்டு அருள்வாயே
படைக்கப்பங்கயன் ; துடைக்கச் சங்கரன்;
புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
பணித்துத் தம் பயம் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடும் தனி வேலா
குடக்குத் தென் பரம்பொருப்பில் தங்குமங்
குலத்தில் கங்கை தன்  சிறியோனே
குறப் பொற் கொம்பை முன் புனத்தில் செங்கரம்
குவித்துக் கும்பிடும் பெருமாளே."
Copyright © 2016 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp