Copy
Nāzhi Kinaru, Tiruchendur's Miraculous Well
View this email in your browser
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Tiruchendur.org
Tiruchendur.org
Palani.org
Palani.org
Kataragama.org
Kataragama.org
அதிசயக் கிணறு
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்
 
திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
 
 à®…சுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
 
பகைவனையும் ஆட்கொண்ட முருகனின் கருணை!
 à®šà¯‚ரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
 
அதிசயத்தினுள் அதிசயம்!
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
Share
Forward to Friend
Facebook
Facebook
Email
Email
Tiruchendur.org
Tiruchendur.org
Naazhi Kinaru:
The Miraculous Well   

One great wonder of Tiruchendur is Naazhi Kinaru, the miraculous well. It is very close to sea.  The devotees visiting Tiruchendur after taking a dip in the sea, bathe in the water of the sacred well before they go to worship Lord Murugan. There is a very interesting legend behind this practice.
Passageway to Nāzhik-kinaru
The passageway to Nāzhik-kinaru and Mudi-kānikkai
The Nāzhik-kinaru
Nāzhik-kinaru today
The demons Surapadma and Tarakasura enslaved the Devas after attaining divine boons. People were tortured by the regime of Tarakasura in the North and Surapadma in the South. After the annihilation of Tarakasura in the North,  Lord Muruga came down to South at the request of the Devas to exterminate Surapadma. Celestial King Indra was the peacock, Lord Murugan’s mount.

Lord Murugan’s intense battle with Surapadma went on for five days.  Surapadman’s brothers and his army were wiped out. On the sixth day Surapadman came to the battlefield all alone. He fought with Lord Muruga with all his might. But he could do nothing against the might of Lord Muruga. At the end, he lurked in his palace under the sea. He emerged as a huge mango tree and confronted Lord Karttikeya. But the mighty spear of Karttikeya-Murugan split the tree in two. A part of it turned into a rooster and the other into a peacock. Lord Murugan accepted the peacock as His ride and let the rooster adorn His staff. Only after this He is seen with peacock and a rooster on His staff.

To quench the thirst of His war-weary warriors, Lord Muruga thrust His lance into the ground bringing out water and forming a well, called Naazhi Kinaru. The square well with the circumference of 14 feet square has a small well within it.  The water in the larger well is brackish and salty in contrast to the smaller one with one foot square in extent which contains crystal clear sweet water.  These two wells, despite their proximity, give two completely different tastes which is indeed a divine miracle.

Original article in Tamil by Uma Balasubramanian translated by Malathi Jayaraman
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp