Copy
பாம்பன் ஸ்வாமிகள்--பகுதி 2
Pamban Swamigal

பாம்பன் ஸ்வாமிகள்

பகுதி 2:
பாம்பன் ஸ்வாமிகள் ஆற்றிய பணிகள்

Pamban Swamigal

எழுதியவர்: வீ.எஸ். கிருஷ்ணன்

தமிழில் மொழிபெயர்ப்பு: தி. ரா. பட்டாபிராமன்

 
தமிழ் கடவுளாம் முருகன் அவர் உள்ளத்தில்
புகுந்துகொண்டான். அவன் அருள் பாக்களாக
இடையூறின்றி இடைவெளியின்றி
வெளிப்பட்டன சொற்கள்
 
மணம் வீசும் மலர்களை நாடும் வண்டுகள்போல் 
பக்தர் குழாம் அவரை நாடி வந்தது
முருகன் புகழ் பாடும் பாடல்களை கேட்டு இன்புற 
 
125 வரிகள் கொண்ட திருவோருமலைக்கோமகன் என்னும் ஒரு பதிகம் மலர்ந்தது இயல்பாக 
 
அவரின் மற்ற பாடல் தொகுப்புகள் சில இதோ 
 
சிவஞான தீபம், சதானந்த சாகரம் 
கருணா கரவேலன்.
 
அடுத்து மலர்ந்தது ஆறு அத்தியாயங்களை கொண்டு 100 பாடல்களாக விரிந்த குமரகுரு ஸ்வாமிகள் என்னும் தொகுப்பு 
 
தன் குருநாதர் அருணகிரிநாதரின் பெருமையை 
அந்நூலில் குறிப்பிட அவர் மறக்கவில்லை 
 
நடராஜ பெருமான் உறையும் சிதம்பரம்
சென்றார் 1896 ஆம் ஆண்டு
அவன் சன்னதியில் இயற்றினார்
தகராலய ரஹசியம் என்னும்
உபநிஷட கருவூலத்தை
 
பின்பு 108 உபநிஷடத்தின் கருத்துக்களை 
உள்ளடக்கி திரோப என்னும் நூலையும்
பரிபூரண பூதன் என்னும் நூலையும் இயற்றினார்.
 
மேலும் பல பாடல்களையும் இயற்றியதுடன்
6, 000 பாடல்களை அமுதமென பொழிந்தார் 
இம்மானிட குலம் உய்ய.

ஷந்முககவசம் என்னும் அவர் பாடல் தொகுப்பு
முருகன் புகழை முத்து முத்தாக தொகுத்து சேர்த்த
முத்து மாலை 
.
அதை பாராயணம் செய்தால்
மனதிற்கு உவப்பு
 
அந்த பாமாலையை 
பக்தியுடன் ஓதுவோர்
கர்ம வினைகள் நீங்கி
முருகன் தரிசனம் பெறுவார் 
 
தீவினைகள்அகலும்
பிணி நீங்கும் 
அடங்காது அலையும் 
மனம் அமைதியுறும் 
ஆற்றல் பிறந்திடும் 
இன்னல்கள் நீங்கி
இவ்வுலக வாழ்க்கை
இனிதே செல்லும்
 
பஞ்சாம்ம்ரிதவர்ணம் என்னும் பாடலில் 
 மனித குலம் வாழ்க்கையில்
கைக்கொள்ளவேண்டிய
செயல்களை நமக்காக
விவரித்துள்ளார்.
 
பிறப்பு இறப்பு என்னும் சுழலில் 
இருந்து என்னை விடுவிப்பாய்
 
சூரனின் பிடியிலிருந்து
தேவர்களை விடுவித்த வேலவனே
 
தாமரை கண்ணனின் மருகனே 
என் மனம் எப்போதும் தாமரை மலர் போன்ற 
உன் மென் மலர் பாதத்தையே 
அடைக்கலமாக கொள்ளட்டும்
 
உலக பொருளை நாடாது 
உலகை ஆளும்
உன் பதத்தையே
என் மனம் எப்போதும் நாடட்டும்
 
என் நா பிறரை வருத்தும்
சுடும் சொற்கள் பேசாது
உன் புகழ் பாடும்
பாடல்களையே பாடட்டும்
 
புலாலுண்ணாது, பொய் பேசாது
புறந்கூறாது 
உண்மை ஞானம் அளிக்கும்
பாதையையே
என் மனம் நாடட்டும்
 
அருணகிரிநாதரின் பாடல்களை 
 ஏற்று அருள் செய்தவனே
 
மயில்மீது அமர்ந்து 
காட்சி தந்த வடிவழகா 
 
அடியேனின் பாடல்களையும் 
ஏற்று அருள் செய்வாய் அமராபதியே 
 
அடியார்களின் குண நிதியே
அன்பின் வடிவே
ஆனந்தம் தருபவனே.
அல்லல் தீர்ப்பவனே
முருகா, முத்துக்குமரா 
ஞான பண்டிதா 
அன்பை தா,
அருளை தா
கந்தா கடம்பா
கார்த்திகேயா
காருண்யா மூர்த்தியே 
உன் திருவடிகளை
சிக்கென பிடித்தேன்
சிந்தையில் நின்று
அருள் செய்
சிங்கார வேலனே.
 

பாம்பன் சுவாமிகளின் தத்துவங்கள்

 
முருக கடவுள்
அறிவையும் ஆனந்தத்தையும்
ஒருசேர அருள்பவன்
 
அவர் கூறுவார்
 
முருகபெருமானை வரவேற்று
நம் இதயத்தில் அவனுக்கு
நிரந்தரமான சிம்மாசனம் அளிப்போம்
 
ஆனால் இதயத்தின் 
 கதவுகளை யார் திறப்பது ?
 
அது உலக பொருள்களையும்
புலனின்பங்களையும் நாடி
கதவை பூட்டி சாவியை
எடுத்து சென்று விட்டதே 
 என்ன செய்ய ?
என்று மனிதன் கேட்கிறான்.
 
அப்போது அவர் சொல்லுவார் 
 இதயத்தின் கதவுகள் மனதுதான் 
அதை திறக்க சாவி தேவையில்லை
அதில் உலக சிந்தனைகள் சம்மணமிட்டு
கும்மாளமடித்துகொண்டிருக்கின்றன.
 
அதனால் இதய கதவுகள் 
 மூடியதுபோல் உள்ளது
அவைகளை கண்டு அஞ்சாதீர்
. இவ்வுலகில் நம்மை சுற்றி
எத்தனையோ இரைச்சல்கள்,
ஒலிகள், எல்லாவற்றையும் நாம்
கவனிப்பதில்லை.
நமக்கு தேவைப்படும் 
 ஒலியைத்தான் நாம்
கவனிக்கிறோம்.
 
அதுபோலதான் இறைவனை 
 பற்றிய சிந்தனைகளை மட்டும் நாம்
கண்கானித்தால் போதும் 
 
மற்ற ஒலிகளும் இரைச்சல்களும் 
அங்கே இருந்தாலும்
நம்மை ஒன்றும் செய்யாது.
 
குழியில் வீழ்ந்துவிட்ட
ஒருவனின் தீன குரலை கேட்டு 
அவனை காப்பாற்ற
முனைபவர்கள் முயற்சி செய்வதுபோல 
சம்சார குழியில் விழுந்துவிட்ட
நம் போன்றோரின் குரலை
நம் உள்ள குகையில் வாசம் செய்யும்
 குகன் என்னும் முருகன் கேட்டு
அருள் செய்வான் நம்பிக்கையிருந்தால்
 
வேதங்கள். புராண , இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை , விவரிக்க வந்த நூலாகவே 
அருணகிரிநாதரின் திருப்புகழை அவர் கண்டார்
 
. அதில் கண்ட அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் தான் முருகனின் அருள் பெற்றதைப்போல் அனைவரும் மூலப்பொருளான முருக பெருமானின் அருளை பெறலாம் என அறுதியிட்டு கூறினார்.
 
யார் பக்தியுடன் திருப்புகழை ஓதுகிறார்களோ அவர்கள் முருகனின் இருப்பை உணரும் பாக்கியம் பெறுவார்கள் 
முருகனே குருவாக வந்து இக பர சுகங்களை அளித்து காத்திடுவான் என்று மக்களுக்கு உணர்த்தினார்.
 
சுபம் சுபம் சுபம்


friend on Facebook | forward to a friend 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp