Copy
திருச்செந்தூரில் கந்தர் ஷஷ்டி அன்னதானம்
Tiruchendur Sri Subrahmanya Swami Devasthanam

செந்தில் ஆண்டவர் அன்னதான சபை
திருச்செந்தூரில் கந்தர் ஷஷ்டி அன்னதானம்

 அன்னதானம் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
சமிஸ்கிருத மொழியில் அன்னதானம் என்றால் அன்னம் அதாவது உணவு தானம் செய்வது அல்லது உணவை மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்வது என்பதாகும். 'தைத்திரிய உபநிஷத்தின்' கூற்றின்படி ' அன்னம்வைப்ரசாத், அதாவது அன்னத்தில் இருந்தே உலகின் ஜீவினங்கள் அனைத்துமே வெளியாகின்றன' மற்றும் 'அன்னம்பஹூகூர்வித், அதாவது தாராளமாக உணவை படைத்து அளிப்போம் ' என்பதாகும். கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூறுகிறார் 'அன்னத்பவன்திபூதானி, அதாவது அன்னத்தில் இருந்தே அனைத்து ஜீவன்களும் மலர்கின்றன'.

தேவலோகத்தில் உள்ள தேவதைகள் விருந்தாளிகள் உருவில் வீடுகளுக்கு வருவதினால் அவர்களை மரியாதையுடன் நடத்தி, உபசரித்து, விதவிதமான உணவுப் பண்டங்களை அவர்கள் மனம் குளிர, வயிறு நிறம்ப அளிப்பதே நன்மை தரும் என்பது பண்டைக்கால நம்பிக்கையாக இருந்தது என்பதின் காரணம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை தெய்வமாகக் கருதி அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை 'அதிதிதேவோத்பவா' என்று மனு சாஸ்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

அன்னதானம் என்பது பசியோடு வரும் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே உணவு அளிக்கும் செயல் என்பதல்ல, வருகை தரும் முன்பின் தெரியாத சன்யாசிகள், பக்தர்கள் போன்றோர்களுக்கும் அவர்களின் வயிறார உணவளிக்க வேண்டும் என்பதாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் சமிஸ்கிருத மொழியில் 'தரித்திரநாராயணா, அதாவது ஏழைகளின் இல்லமே கடவுள் வாழும் இடம்' என்ற மேன்மையான சொல் கூறப்பட்டு உள்ளது என்பதே உண்மை.

திருச்செந்தூர் கந்தர் ஷஷ்டி
ஆறு நாட்கள் கடுமையான யுத்தம் செய்து தேவர்களுக்கு கொடுமைகளைப் புரிந்த அசுரன் சூரபத்மன் மற்றும் அவனை சார்ந்த கொடிய அசுரர்களை வதம் செய்த முருகப் பெருமானின் பெருமையை கொண்டாடுவதே கந்தர் ஷஷ்டி விழா என்பது. திருச்செந்தூரில்தான் அந்த யுத்தத்தின் இறுதிக் கட்டம்
Click to enlarge image of Tiruchendur Devasthanam
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்
Thavatiru Muttu Irulāyi Ammaiyar coordinates annadanam at Tiruchendur Kanda Sashti
முத்திருளாயி அம்மையார்
Annadanam Sabha members help Ammaiyar
Annadanam Sabha members help Ammaiyar
செந்தில் ஆண்டவர் அன்னதான சபை
நிகழ்ந்து அசுரர்களை முருகப் பெருமான் அழித்தார் என்பதான ஐதீகம் உண்டு. அதனால்தான் முருகப் பெருமானின் பக்தர்களான கிராமப்புறத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஆறு நாட்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, கடுமையான விரதம் இருந்து, அங்கு வந்து கந்தர் ஷஷ்டி விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

கந்தர் ஷஷ்டி விழா நாட்களில் அங்கு வரும் லட்சக்கணக்கான முருக பக்தர்களுக்கு செந்தில் ஆண்டவர் அன்னதான சபை நன்கு சமையல் செய்த உணவை அங்கு வரும் பக்தர்களுக்குப் படைத்து, அவர்கள் மனம் குளிர முருகனை சேவிக்கும் வகைக்கான நிலையை ஏற்படுத்த அன்னதானம் செய்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தை சேர்ந்த திரு அளகரஸ்வாமிசேர்வை என்பவர் தனி ஆளாகவே நின்று தம்மிடம் பக்தர்கள் கொடுத்த காணிக்கையில் உணவு சமைத்து திருச்செந்தூர் கந்தர் ஷஷ்டி விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.   தமது குருநாதரின் வழியை பின்பற்றி முத்திருளாயி அம்மையார் மற்றும் செந்தில் ஆண்டவர் அன்னதான சபை அடியார் போன்றவர்கள் திருச்செந்தூர் கந்தர் ஷஷ்டி விழாவிற்கு மட்டும் அல்ல ஒவ்வொரு ஷஷ்டி தினத்தன்றும் விரதம் பூண்டு ஆலயத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நன்கு சமையல் செய்த அறுசுவை உணவை அன்னதானமாக செய்து வருகிறார்கள்.

Muttu Irulāyi Ammaiyar directs annadanam
Kanda Sashti Annadānam at Tiruchendur
Donate by PayPal
வருடம் முழுவதும் கிடைத்து வந்த சொற்ப நன்கொடைகளைக் கொண்டு இப்படியாக தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரும் முத்திருளாயி அம்மையார் மற்றும் அவரை சார்ந்தவர்களினால் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே உள்ள நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் அந்த சொற்ப நன்கொடைகளைக் கொண்டு அங்கு வரும் ஏழைகளின் வயிற்றுப் பசியை துடைக்கும்  புனிதத் தொண்டான அன்னதான சேவையை நன்கு தொடர முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவேளை உணவளிக்க ஆகும் செலவு ரூபாய் 13 (US$ 0.25) மட்டுமே. 200 பேர்களுக்கு உணவளிக்க ஆகும் செலவு US$ 50 மட்டுமே. ஆகவே கந்தர் ஷஷ்டி தினங்களில் அந்தப் புனித சேவையான அன்னதானம் தொடரும் வகையில்  அந்த அம்மையாரின் தொண்டுக்கு உதவிடும் வகையில் தாராளமாக  காணிக்கைகளை அனுப்ப வேண்டும் என்று முருக பக்தி இயக்கம்  வேண்டிக் கொள்கிறது.

குறிப்பு: திருச்செந்தூரில் கந்தர் ஷஷ்டி தினங்களில் மட்டுமே இந்த சபை  அன்னதானம் செய்து வருகின்றது

நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
செந்தில் ஆண்டவர் அன்னதான சபை
(Registration No. 444/2010)
18/6, பட்டர் சாலை
64-C, பாக்பத் அக்ரஹாரம்
மானாமதுரை – 630606
மானாமதுரை போஸ்ட் & தாலுக்கா
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
E-mail: annadhaanam@gmail.com

சபை அலுவலகம்
  • நிர்வாக அறக்காப்பாளர் முத்திருளாயி அம்மையார் : கைபேசி எண் 9943189909
  • செயலாளர் திரு சுரேஷ் குமார் : கைபேசி எண் 9940966078
  • பொருளாளர் திரு M.K. கதிரேசன் : கைபேசி எண் 9943105653
வங்கிக் கணக்கு பெயர்: செந்தில் ஆண்டவர் அன்னதான சபை
வங்கிக் கணக்கு எண்.: 31489907421
வங்கியின் பெயர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

வங்கி விலாசம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
சிப்காட் தொழில்பேட்டை வளாகம் – 7055
மானாமதுரை – 630606
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா
IFS எண்: SBIN 0007055
வங்கி தனி எண்: 7055
MICR எண்: 623002606

அன்னதானம் எந்த வகைகளில் செய்யலாம்?
  • (+91) 994 3189909 என்ற தொலைபேசி எண் மூலம் முத்திருளாயி அம்மையார் அவர்களை தொடர்ப்பு கொள்ளலாம்
  • காணிக்கைகளை நேரடியாக செந்தில் ஆண்டவர் அன்னதான சபை வங்கிக் கணக்கில் செலுத்தலாம்
  • முருக பக்தி ஆசிரியர் பேட்ரிக் ஹாரிகனுக்கும் (kdt@okanda.org) 'கிரெடிட் கார்ட்' அல்லது 'பே பால்' (www.PayPal.com) என்பதின் மூலம் நன்கொடைகளை அனுப்பலாம்
  • editor@murugan.org என்ற இணையதளம் மூலமும் முருக பக்தி ஆசிரியர் பேட்ரிக் ஹாரிகானுடன் தொடர்ப்புக் கொள்ளலாம்
  • திருச்செந்தூர் கந்தர் ஷஷ்டி விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தலாம், அல்லது அன்னதான சேவையில் ஒரு தொண்டராக பங்கேற்கலாம்

செந்தில் ஆண்டவர் அன்னதான சபை
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp