Copy
மலேசிய நண்பன் 13-08-2012: முருக பக்தி மாநாடு
Murugan Bhakti newsletter

 இந்திய ஆய்வியல் துறையின் கீழ்

மூன்று அறக்கட்டளைகள்!
அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் அறிவிப்பு

Batu Malai Muruganகோலாலம்பூர். 2012 ஆகஸ் 13மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் கீழ் மூன்று புதிய அறக்கட்டளைகள் தொடங்குவதற்கு சுமுக இணக்கம் காணப்பட்டு உள்ளது.


கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டத்தோ ஆர். நடராஜா தலைமையில் பக்தி இலக்கிய அறக்கட்டளை, முன்னாள் துணையமைச்சர் டான் ஸ்ரீ கா.குமரன் தலைமையில் கோ.சாரங்கபாணி அறக்கட்டளை,
First Muruga Bhakti Conference, Kuala Lumpur
கணேஷ்குமாரிடம் மாநாட்டின் சின்னத்தை ஒப்படைக்கிறார் தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள்
தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க காவலர் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தலைமையில் டான் ஸ்ரீ சோமா அறக்கட்டளை ஆகியவையே அந்த மூன்று புதிய அறக்கட்டளை ஆகும்.

இந்த மூன்று அறக்கட்டளைகளும் இந்திய ஆய்வியல் துரையின் கீழ் இயங்கப் பெறும் என்று அத்துறையின் புதிய இணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.
Bharata Natyam at 1st international Muruga Bhakti conference
சென்ற வியாழர்கிழமைத் தொடங்கி நேற்று மாலை வரை மலாயப் பல்கலைக்கழக பெர்டானா சிஸ்வா அரங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக முருக பக்தி மாநாட்டின் நிறைவுப் பகுதியில் உரை ஆற்றுகையில் அவர் இந்த அறிவிப்பை செய்தார்.

இந்நாட்டில் பக்தி இலக்கியங்களும் தமிழும் தொடர்ந்து நிலைபெறுவதற்கு இந்த மூன்று புதிய அறக்கட்டளைகளும் வழி வகுக்கும் என்றார் அவர்.
இப்புதிய முயற்சிக்கு இந்திய சமூகத்தின் வற்றாத ஆதரவு கிடைக்கப் பெற வேண்டும் என்றும் முனிவர் கிருஷ்ணன் மணியம் கேட்டுக் கொண்டார்.
 
தேதி பத்திரிகை கட்டுரை
02-08-2012 மலேசிய நண்பன் முருக பக்தி மாநாட்டில் கட்டுரைப் படைக்கும் அமெரிக்கர்
12-08-2012 நம் நாடு முருக பக்தி மாநாட்டில் அமெரிக்க நாட்டு முருக பக்தர் பேட்ரிக் ஹரிகன் பேசுகிறார்
12-08-2012 நம் நாடு ஆலயங்கள் சமயக் கூடங்களாக உருமாற வேண்டும்
12-08-2012 நம் நாடு உடலில் ஊசி குத்தாமல் முருகனை வழிபட வேண்டும்
13-08-2012 தினக்குரல் முருகப் பெருமானின் பெருமைகளைப் பரப்பும் முருக பக்தி மாநாடு
13-08-2012 தமிழ் நேசன் தமிழ் கடவுளுக்கு பெருமை சேர்த்த மாநாடு
13-08-2012 தமிழ் நேசன் வாழ்வில் நல்ல இலக்கை அடைய முருக வழிபாடு அவசியம்


அடுத்த மகாநாடு சுவிட்சர்லாந்தில்

திருமுருகன் திருவாக்குப் பீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் தலைமையில் மிகவும் நேர்த்தியாக நடைபெற்று முடிந்துள்ள அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014 டில் சுவிட்சர்லாந் நாட்டில் நடத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து 2016 டில் தென் ஆப்பரிக்க நாட்டில் இம்மாநாடு நடத்தப்படும் என்று தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் அறிவித்தார்.

அனைத்துலக முருக பக்தி மாநாடு பல சுவையான அனுபவங்களுடனும் இறை உணர்வுடனும் நேற்று மாலை இனிதே நிறைவடைந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்ட அம் மாநாட்டின் இறுதி அரங்கத்தில் தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் உரையாற்றினார்.

''நாங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் இந்த முருக பக்தி மாநாட்டின் வழியாக கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் இந்திய ஆய்வியல் துறையின் கீழ் செயல்பட உள்ள மூன்று புதிய அறக்கட்டளைகள் .

உலகுக்கு தமிழைத் தந்த முருகப் பெருமான், மலேஷியா தமிழர்களுக்காக இப்புதிய அறக்கட்டளைகள் உருவாக்கம் பெறவும் அருளாளராக இருந்துள்ளார். இது மாநாட்டுக்குக் கிடைத்தப் பேறு எனலாம்.

உலகளாவில் முருகப் பெருமான் நிறைந்துள்ளார். அயல்நாட்டவரும் முருகனை வழிபடுகின்றனர். முருகனின் ஞானக் கருத்துரைகளும் நெறிமுறைகளும் உலகளவில் படரச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஒரு படிதான் அடுத்த மாநாட்டை சுவிட்சர்லாந் நாட்டில் நடத்துவது. அங்கு சுமார் 45000 முருக பக்தர்கள் வாழ்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்காவிலும் முருகப் பெருமானின் ஞானக் கருத்துக்களை சேர்க்க உள்ளோம். அந்நாட்டில் சமயம் வளர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். இந்த மாநாட்டுக்
Palani Andavar Murugan
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp