Copy

குமாரஸ்தவம் 2-3 நாமங்களின் விளக்கவுரை

View this email in your browser
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tirichendur.org
Tirichendur.org
Kataragama.org
Kataragama.org

குமாரஸ்தவம்

2-3 நாமங்களின் விளக்கவுரை

Lord Karttikeya or Murugan

குமாரஸ்தவம் விளக்கவுரை்

குமாரஸ்தவம் [2 ,3 நாமங்களின் விளக்கவுரை]

'திருப்புகழ் அடிமை' திரு நடராஜன் அவர்களால் தொகுத்து அளிக்கப்பட்டது.

[2] ஓம்      ஷண்மத    பதயே நமோ நம:
 
அறு  சமய  தலைவனே  போற்றி     போற்றி:
 
சமயங்கள் வரலாறு :

மக்களது    அறிவு தெளிவு     பெற்ற போது தான்  இறைவன்   இலக்கணம்  முதலியவை      செம்மையாக விளக்கம்    பெற்றன.    ஆனால்     மக்கள்து    அறிவு நிலை பலவேறு      திறத்தினதாக இருக்கிறது.  அதற்கேற்ப  காலம் தோறும்     மாறும்      சீலத்தினை      அடிப்படையாகக்    கொண்டு    பலப்பல     சமயங்கள்   தோன்றலாயின.    இவ்வாறு      தோன்றிய   சமயங்களைப்      புறப்புறச்    சமயம்,      புறச் சமயம், அகப்புறச்    சமயம்,      அகச்சமயம்  என   நான்கு            பெரும்      பிரிவுகளில்  அடக்கலாம்.
 
புறப்புறச் சமயங்கள்
(1)    உலகாயதம்  (2)    மாத்யமிகம்  (3)    யோகசாரம்  (4)    சௌத்ராந்திகம்     (5)      வைபாடிகம்  (6)    ஆருகதம்    என   ஆறாகும்.
 
புறச் சமயங்கள்
(1)    தர்க்கம்      (2)    மீமாம்சை   (3)    ஏகான்ம வாதம்    (4) சாங்க்யம்       (5) யோகம்  (6)      பாஞ்சராத்ரம் என   ஆகும்.
 
 
அகப்புறச் சமயம்
(1)    பாசுபதம்    (2)    மாவிரதம்   (3) காபாலம் (4)    வாமம்      (5)    வைரவம்    (6)      ஐக்யவாத   சைவம்     என   ஆறு  வகையாம்.
 
அகச் சமயம்
(1)    பாஷாணவாத      சைவம்     முதல் சிலாத்துவித (அப்பய்ய தீக்ஷிதர்) ஈறாக உள்ள ஆறு      என்பர்.
    
இவ்வாறலாமல்     பாஷாணவாதத்தையும்,   பேதவாதத்தினையும்      கூட்டி எண்ணி      சுத்த  சைவத்தையும்     உடன் சேர்த்து,     அகச்சமயத்தை    ஆறென     கூறலும்      உண்டு      ஆனால்    ஏகன், அநேகன்,    இருள், கர்மம்,      மாயை      இரண்டு      என்ற ஆறு பொருளும்   கொண்ட    பாஷாணவாதம்    முதலிய     ஆறே அகச்சமயம்      என்று திருவருட்பயன்     கூறுவது    காண்க.
 
இவை ஒவ்வொன்றின்     விளக்கம்    வேண்டுவோர்      சிவப்பிரகாசம்,      சிவஞானசித்தியார், சுபக்ஷம்,    சிவஞான    பாஷ்யம்    முதலான    சைவ சித்தாந்த      நூல்களில்   காண்க.
 
மேலே  கூறியவண்ணம்    சமயங்கள்   நால்வகைப்  பிரிவு உடையன   எனினும்      ஒவ்வொன்றும்     ஆறு  உட்பிரிவு    கொண்டது,  ஆகையால்  இந்த  ஆறு  சமயத்திலும்      அதிபதியாக  இருப்பவன்  முருகன்.    ஒருவனே   என்ற உண்மையை விளக்குவது என்று      கொள்வதே  சரியாகும்   இவ்விதமான     24    உட்பிரிவுகள் கொண்ட    சமயங்கள்      ஆறினுக்கும் தலைவருக்கு      வணக்கம்    என்பதையே ஷண்மத    பதயே நமோநம:       என்று குமாரஸ்தவம்     கூறித் துதிக்கின்றது. ஆறுசமயத்  தலைவன்   ஆறுமுகனே என்பது
 
"ஆறு சமயரும்    தத்தமில்    ஒவ்வாது    இங்கு அலைவது   என்னே
தேறும்      அறிவினர்   எல்லாம்     அறிந்தும்    தெளிந்திலரோ
பேறு  தரும் தெய்வம்    யாவைக்கும் யாம்  பெரும்      தேவன்      என்றே
வீறு  முகம் கொண்டு    போரூர்     முருகன்     விளம்பியதே."

                                    -திருப்போரூர்      சந்நிதி முறை
 
"ஆறு சமயக் கடவுள்      வேறு வேறின்றி    யான்  ஒருவனே
அங்கங்கிருந்து     அன்பருக்கு  முத்தி தருவித்து   என்று
யாவர்க்கும்  அறிவித்த   வதன மணியே"   
(சிதம்பர சுவாமிகள்)
 
அறு  சமய  சாத்திரப்     பொருளோனே-     (திருப்புகழ்)
 
"அறு  சமயத்தில்   அதிபதி      நான்  என்றும்
கூறு  சமய  குருபரன்    நான்  என்றும்
தேறினர்     தேற  திரு   அம்பலத்துள்ளே
வேறின்றி    அண்ணல்   விளங்கி     நின்றானே"

எனும் திருமூலர்   வாக்குகளைச்      சிந்திக்கவும்.
 
ஒரே   ஊருக்கு     ஆறு  வழி  இருப்பது    போல இறைவன்   ஒருவனை   அடைய      ஆறு  வகைச்      சமயங்கள்   ஏற்பட்டன.   "ஒன்றே     பேரூர்;       வழி  அதற்கு      ஆறுள"      அறு  சமயங்களிலும்     ஆண்டவன்  ஒருவனே   தலைவன்   என்பதை      விளக்கவே  "ஷண்மத    பதயே நமோநம:"   என்று பாம்பன்     அடிகள்      துதிக்கிறார்.      கணபதியை  வணங்கும்   காணாபத்யமும்,    சிவனாரை   இறைஞ்சும்  சைவமும்,   சக்தியை      வழிபடும்    சாக்தேயமும்,      விஷ்ணுவைத்     துதிக்கும்    வைணவமும்      சூரியனைத்  தொழும்     சௌரமும்,  குமரனைத்  தொழும்     கௌமாரமும்      என்ற      ஆறு  வகைச்      சமயங்கட்கும்      அவ்வவர்    பொருளாய்  நிற்கும்      தலைவனுக்கு      வணக்கம்    என்னலும்   ஆம்.
 
[3]   ஓம்   ஷட்க்ரீவ    பதயே நமோ நம:

ஷட்  =     6
க்ரீவ  =     கழுத்துக்களை     உடைய
பதயே =     தலைவனுக்கு      நமோ நம   போற்றி    போற்றி.
செவ்வேள்   பரமனது     திருவுருவத்தில்    திருமுகங்களைப்   போலவே    திருக்கழுத்துக்களும்      அருள் சிறப்பு மிக்கவை.   கழுத்துக்களைக்    கூறவே,     திருத்தோள்களே   கொள்ளப்படும்.      கழுத்தில்    அணியும்    அணிகலன்களும்   மாலைகளும் திருத்தோள்களிலே அசைந்தாடுவன      ஆதலின்
 
க்ரீவம்
க்ரீவம்      என்ற வடசொல்   கழுத்து      என்று பொருள்படும்.      இலங்கை    வேந்தனுக்கு      பூர்வத்தில்   ராவணன்    என்ற பெயரில்லை தசக்ரீவன்  என்றே      அழைக்கப்பட்டான்  தசக்ரீவன்   என்றால்     பத்து  கழுத்துக்களை     உடையவன் என்று பொருள்.    தசகண்டன்       என்றும்     அழைப்பதுண்டு.    ஒரு  சமயன்      சிவனார்     இருந்த      திருக்கயிலை            மலையை   அகந்தையொடு     ஐயிரு தலையுடை  அரக்கன்     பெயர்த்திட      முயன்றான். உடனே      செஞ்சடைப் பரமன்      தமது கால்  பெருவிரலை அழுந்த      ஊன்றினார்.  அவ்வளவுதான்     அரக்கனின்   ஒருபது     சிரங்களும்,  இருபது     கரங்களும்      நெரிந்தன.   [அருவரை   எடுத்த வீரன் நெரிபட     விரற்கள்    ஊணும்...]      வலிதாங்கமாட்டாமல்     ஒரு  போதும்     அழுதறியாதவன்   கண்ணீர்     ஆறாய்ப்      பெருகி            அலறி அழுதான்.    தனது முறிந்த     கைகளில்    ஒன்றை     எடுத்து      நசுங்கிய     தலையுடன்  சேர்த்து     யாழாகப்    பாவித்து    சாமகானம்  செய்தான்.      பரமசிவனார் அவனது     பத்து  இலங்கு     வாயாலும்   பாடல் கேட்டுப்     பரிந்து "இராவணன்  --     அழுதவன்"   என்ற பெயரைச்    சூட்டி அருள் புரிந்தனர்.    அன்று முதல்      தசக்ரீவனுக்கு      இராவணன்  என்ற பெயர் வழங்கலாயிற்று   இதனை
 
 "கைத்தலங்கள்    இருபதுடை  அரக்கர்      கோமான்
      கயிலை     மலையது   தன்னை     கருதாது     ஓடி
முத்திலங்கு  முடி  துளங்க      வளைகள்   ஏற்றி முடுகதனும்
      திருவிரல்   ஒன்று அவன்மேல்  வைப்ப
பத்திலங்கு   வாயாலும்   பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு;
      இராவணன்  என்று ஈந்த  நாம
தத்துவனை  தலையாலங்காடந்தனைச் சாராதே
      சால நாள் போக்கினேனே"
 

                               -அப்பர்     அருளியதைக்      காண்க

எனவே      க்ரீவம்      என்பது      கழுத்து      என்ற பொருளில்   பயின்றுள்ளது      புலனாயிற்று. தேவி பக்தராகத்    திகழ்ந்த     ஒரு  முனிவருக்கு ஹயக்ரீவர்  என்ற பெயர்      இருந்தது    எனத் தெரிய            வருகிறது.   ஒரு  கழுத்துடையவன்   பெரியவனாய்      இருந்தால்   அவனுக்குப்  பல   மாலைகள்   சூட்டுவதைப் பார்க்கிறோம். ஆறுமுக      வித்தகனாய் அறிவிற்     பெரிய மேன்மைக்காரனான முருகப்     பிரானுக்கு   ஆறு      திருக்கழுத்துகளிலும்      அநேக மாலைகள்   உள்ளன.     அவற்றுள்   பல   பொன்னாலான      பதக்கங்களும்      முத்து நவரத்ன     ஆரங்களும்  வேறு பல   அணிகளும்  உள்ளன.      இவையன்றி அகத்தடிமையானவர்      தொடுத்த    கவி  மாலைகளும் உள்ளன.     "உரை       பெற  வகுத்த      அருணை    நகரின்      ஒரு  பக்தன்      இடும் ஒளி  வளர் திருப்புகழ்      மதாணி"யும் இருக்கிறது.
 
"பலப்பல    பைம்பொன்  பதக்கமும்   ஆரமும்
 à®…டிமை    சொலும்     சொல் தமிழ்ப்            பன்னீரொடு
 à®ªà®°à®¿à®®à®³     மிஞ்சும்     கடப்ப மாலையும்  அணிவோனே"

                                        --(மலரணி)

 "கடிமா      மலர்க்குள்   இன்பம்      உள   வேரி கக்கு
 à®¨à®£à¯à®ªà¯            தரு   மா   கடப்பமைந்த தொடைமாலை
 à®•à®©à®®à¯‡à®°à¯   ஒத்திடும்    பன்னிரு     மாபுயத்தணிந்த
 à®•à®°à¯à®£à®¾à®•à®°  ப்ரசண்ட     கதிர்வேலா"

 
"பன்னிருவாகுவில்  என்   சொல்லே    புனையும்    சுடர்  வேலவனே!"
 
"வகை வகை குழுமி,      மொகுமொகு மொகென    அநேக
 à®šà®®à¯‚க            ராக   மதுபம்      விழ  சிறு   செண்பகம்
 à®šà¯†à®±à®¿à®¨à¯à®¤    தாரில் பொலிந்தன"

                                     --(புய வகுப்பு)

 "உருள்     பூந்தண்தார்  புரளும்      மார்பினன்"
மேலே      கூறிய மாலைகள்   அனைத்தையும்    ஏற்று அவரவர்க்கு அருளும்    கருணையே      நிறைந்தவை கந்தன்      கழுத்துக்கள் என்பார்,     'ஆறு  கழுத்துக்கள் உள்ள தலைவன்'      என்கிறார்    பாம்பனடிகள்.      பதி   என்ற வட   சொல் தலைவன்   என்ற பொருள்      உடையது.   பூபதி, சுரபதி நரபதி,      துரகபதி,     கஜபதி முதலிய     பெயர்களால்      அறியலாம்.  அச்சொல்    தொடர்ந்து   வரும்போது நான்காம்    வேற்றுமை  உருபு 'ய'      ஏற்று 'பதி   +     ய    =     பதயே என   வடமொழி   இலக்கணப்படி      மாறியது.      ஆதலால்    ஷட்க்ரீவ    பதயே நமோ நம:   என்க.
 

 

Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp