Copy
முருக பக்தி கையேடு--பகுதி 4
Sri Valli-Teyvanai Samedha Murugan

முருக பக்தி கையேடு

பகுதி 4

எழுதியவர்: பேட்ரிக் ஹரிகன்

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

21 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கும் முருக பக்தி மரபு உலகெங்கும் படர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும் தமிழர்களிலும் ஒரு சிறிய பிரிவினர் அதை இன்னமும் புரிந்து கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்த முருக பக்தர், முருக பக்தியின் தோற்றம், அதன் வரலாறு, தன்மை, மற்றும் பக்தி வழிபாடு போன்ற அனைத்தையும் 1970 ஆம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, இந்தக் கட்டுரை மூலம் அவற்றை விவரித்துள்ளார்.

From 9-12 August 2012, Malaysia will host the 2012 International Conference on Muruga Bhakti. Some of the articles by conference participants will be serialized and published in advance of the conference. This final part concludes the article by Murugan.org editor Patrick Harrigan.


திர்காம ஸ்கந்த இன்று என்னுடைய எஜமானர். வேலை எதுவாக இருந்தபோதிலும், அதை நான் சரிவர செய்ய வேண்டும். ஆகவே பாபாவை வளர்த்துக் கொள்ள நல்ல மார்க்கம் என்ன என யோசித்தபோது நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.  நாம் பேசுவது மற்றவர்களிடம் அல்ல, ஆனால் முருகனுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை அவர் நாம் பேசுவதைக் கேட்கவில்லை என்று தோன்றினால்,  நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும் புரிந்து  கொண்டு, நம் இதயத்தின் உள்ளேயே அவர் அமர்ந்து இருப்பதைப் போல கற்பனை செய்து கொண்டு, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளதைப் போல நமக்குள் நாமே பேசிக் கொள்ள வேண்டும்.

சொல்ல நினைப்பதை எந்த மொழியில் வேண்டுமானாலும் கூறலாம், எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதற்கு முன் நீங்கள் அப்படி பேசுவதை முதலில் பழக்கபடுத்திக் கொண்டு திறமையாளராக உங்களை மாற்றிக்  கொள்ள வேண்டும்.  காரணம் ஒருவேளை அவர் உங்கள் முன் திடீர் எனத் தோன்றிவிட்டால், ஒரு வேலைக்காரன் எஜமானரிடம் ஊதிய உயர்வைக் கேட்பது போல நீங்களும் அவரிடம் எதையாவது கேட்கும் நிலையில் உங்களை வைத்துக் கொள்ள வேண்டும் (முருக பதர்கள் முருகனிடம் சம்பளம் பெறுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக அவர் தரும் சன்மானங்கள் மிகப் பெரியவை.  முடிவாக ஓய்வூதியம் என்பது இந்த உலகை துறப்பதே ஆகும்).

ஒருமுறை நான் தைரியமாக முருகனிடம் பேசினேன். அவர் என்னுடன் பேசுவாரோ மாட்டாரோ என்பதைக் குறித்துக் கவலைப் படாமல் அவரை என்னுடைய எஜமானர் போல நினைத்துக் கொண்டு  பேசினேன்.  அந்த நிலைதான்  சாக்ய பாவா, அதாவது நண்பரைப் போன்று அவருடன் இருந்த நிலை என்பதைப்  உணர்ந்தேன். இப்போதெல்லாம் என்னால் அவருடன் குறும்பானப் பேச்சுக்களைக் கூட பேச முடிகின்றது.  நான் எங்கு சென்றாலும் அவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறேன்.  சில நேரங்களில் அவரை கள்வன் , போக்கிரி என்றெல்லாம் கூடப் பரிகாசம் செய்கிறேன்.  இந்த பாவாவில் முருகனுடன் இருப்பது ஒரு நெருக்கமான நண்பர் மத்தியில் உள்ளதைப் போன்ற நிலை என்பதை உணர்கின்றேன்.

நீங்கள் அந்த நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை பார்க்காமல் தன்னை மறந்த நிலையில் இருக்கலாம். ஆனால் அந்த நிலைக் கூட பக்தி யோகத்தில் வந்து விடும். ஒரு தாய் தன்னுடையக் குழந்தையிடம் பழகுவதைப் போன்ற நிலை வாத்சல்ய பாவாவாக உள்ளது. அந்த நிலையில்  முருகனை தன்னுடைய குழந்தையாக பாவிக்கும் பெண்மணியாக இருந்தால் முறையாக இருந்திருக்கும் என்றாலும், என்னுடைய நிலையில் உள்ளவர்கள் அவரை தெய்வீகக் குழந்தையாகவே பாவித்து, தம்முடன் அவரை பரிவர்த்தனை செய்து கொள்கிறார்கள். அதாவது ஸ்கந்த முருகன் என்னை ஒரு குழந்தைப் போல பாவித்தால், ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தை விளையாடுவதைப் போல நாமும் அவருடன் விளையாடும் குழந்தையாகவே இருப்போம்.

தற்போது நமக்கு முன் உள்ள கேள்வி  இரண்டு நிலையிலானது. முதலாவதில் முருகன் ஒரு குழந்தை என்று கருதினால், அவர் பிஞ்சிலே முதிர்ந்த ஆற்றல் மிக்கக் குழந்தை என்று புரிந்து கொள்ள வேண்டும் .  கெட்டியான பந்தைக் கொண்டு வேகமாக அடிப்பதைப் போல நம்முடைய வாழ்க்கையில் அவர் திருவிளையாடல்களை நடத்திக் காட்டவே விரும்புவார்.  அந்த திருவிளையாட்டில் கன்றிப் போகும்படி கிடைத்த அடியைப் போன்ற விளைவுகள் நம் வாழ்க்கையிலும் ஏற்படலாம் . ஆகவே அவரிடம் செல்பவர்கள் அத்தகைய திருவிளையாடல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.

இரண்டாவது நிலை என்ன என்றால், நாம் அவருடன் இருக்க விரும்பினால், அவருடைய திருவிளையாடல்களை சகித்துக் கொண்டு அவர் வழியிலேயே செல்ல வேண்டும்.  ஆனால் எப்படி திருவிளையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வரை முறைகள் கிடையாது. அவரும், பிற தெய்வீக தேவர்களும் நம்மிடம் காட்டும் திருவிளையாடல்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் நமக்குக் கிடையாது. அதிருஷ்டவசமாக பால முருகன் நம்மிடம் மிகவும் கனிவாகவும், பொறுமையுடனும் இருந்து கொண்டுதான் தனது திருவிளையாடல்களை நம்மிடம் காட்டுவார்.

ஆகவே அவர் விளையாடும் ஆட்டத்தில் நாம் நிச்சயமாக அவரை தோற்கடிக்க முடியாது என்பதை அவரும் அறிந்துள்ளார் என்பதினாலும், அந்த தெய்வீக விளையாட்டுக்கான குறிப்பை நமக்கு பல வகைகளிலும் உணர்த்திக் கொண்டே இருந்தவாறு இருப்பதினாலும் , அவரை நன்கு புரிந்து கொண்டு அவருடன் இன்னமும் நெருக்கம் ஆக்கிக் கொள்ள நமக்கு வழி காட்டுகிறார் என்றே உணர வேண்டும்.

அவர் தங்கி உள்ள பழனி மற்றும் கதிர்காமம் போன்ற இடங்கள் அவருக்குப் பிடித்தமான விளையாட்டு இடங்கள். அதை ஒரு விளையாட்டு மைதானம் போல அவர் வைத்துள்ளதினால் அங்கு சென்றே அவரவர்கள் அனுபவங்களைப் பெற வேண்டும். ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தின் அடித்தளத்திலும் குஹாவாக அமர்ந்து உள்ளவர், இதயத்தின் மறைவிடத்தில் மறைந்து கொண்டு, இதயத்திலுள்ள அவரை எளிதில் உணர முடியாதபடி  தமது  பக்தர்களை தவிக்க வைக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டமே அவருக்குப் பிடித்தமான விளையாட்டு .

ஒவ்வொருவரும், தனது மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பழகும் நிலையான மதுர பாவா என்பதில் எனக்கு அனுபவம் இல்லை. ஆனால் அதைக் குறித்து வள்ளி மற்றும் தெய்வானை அவற்றை நன்கு அறிந்திருப்பார்கள். அது போன்ற பாவ சமாதி நிலையை மிகச் சிறிய அளவிலான பக்தர்கள் அடைந்து இருந்திருக்கலாம். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய தாழ்மையான வந்தனங்கள்.  இந்த விஷயத்தில் என்னுடைய அறியாமையை குறித்து நானே ஒப்புக்கொள்கிறேன்.

Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp