Copy
சங்கத் தமிழில் திருச்செந்தூர்--பகுதி 2
Tiruchendur Senthil Andavar

சங்கத் தமிழில் திருச்செந்தூர்
(முருகன் கருவறைக் காட்சி)

பகுதி 2
நூல்: திருமுருகாற்றுப்படை (Lines 104-118)

கவிஞர்: நக்கீரர்
திணை: பாடாண்
துறை: ஆற்றுப்படை

(திருச் சீர் அலை வாய்)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய, மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு நிமிர் தோள்:

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை; உக்கம் சேர்த்தியது ஒரு கை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை;
அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை

மார்பொடு விளங்க, ஒரு கை
தாரொடு பொலிய; ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய; ஒரு கை

வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;
ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்றுசெந்தூர் – ஆலயக் குறிப்பு:

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்; அப்பறம் எப்படிக் கடலோரம்?:)
குறிஞ்சி = மலை; முல்லை = காடு
இந்த ஆதி மக்கள், இடம் பெயர்ந்து விளைநிலமும் (மருதமும்), கடல்செல்வமும் (நெய்தல்) கண்டார்கள்; அப்படி இடம் பெயர்ந்த போது, தங்கள் தொன்மங்களையும், உடன் எடுத்தே சென்றார்கள் – முருகன் (எ) தொன்மத்தையும்; Thus he came, from mountains to sea…

இன்று நாம் காணும் திருச்செந்தூர் = மாட மாளிகை கூட கோபுரம்;
ஆனா, சங்க கால/ சிலப்பதிகாரக் காலத்துச் செந்தூர் = எளிமையான கோட்டம்!

கோபுரமெல்லாம் 19th CE-இல், மூவர் சாமிகள் முயற்சியெடுத்துப் பெருசாக் கட்டியது; அதுவும் இன்னிக்கி பூட்டியே தான் வச்சிருக்காங்க;
அதுக்கு முன்னாடியெல்லாம் செந்தூர் = ஒரு வீடு போலத் தான்;
கோட்டம்! = பனை மரங்கள் சூழ், அலை வாய்ச் செந்தூர்க் கோட்டம்;

Old Tiruchendurகடலில் இருந்து 100 மீட்டர் கூட இருக்காது, அவன் இருக்கும் இடம்!
கடல் பொங்கினா முங்கிற வேண்டியது தான்!

செந்தூர்க் கருவறை = கடல் மட்டத்தை விடக் கீழே, பள்ளத்தில்!
ஞாபகம் வச்சிக்கோங்க; நீங்களும் கடலுக்கு அடியில் தான்:)  Over head Water Tank – Sea Tank:)

அவனை இறங்கித் தான் பாக்கணும்;
பார்த்த பின், நம்மை, மேலே ஏற்றி விடுவான்:)

செம்பாறைச் சந்தன மலையைக் குடைந்து கட்டிய அறை; குளு குளு -ன்னு அலை வாய்;
இன்னிக்கி மலை இருக்கும் இடமே தெரியாது பொடி ஆக்கியாச்சு; சேயோனை ஒட்டி இருக்கும் மாயோன்/திருமால் ஆலயத்தில்… மலையின் கொஞ்சமே கொஞ்சம் மிச்சப் பகுதியைப் பார்க்கலாம்;

ஒரு வீடு போல எளிமையான கோட்டத்தில்…
புராணங்களும்/ போத்தி (எ) பூஜா பரம்பரைக்காராளும் புகுந்து கொண்டு,
தமிழ் முருகனைச், “சுப்ரமணிய ஸ்வாமி” ஆக்கி விட்டனர்;

(உண்மை கசப்பினும் உண்மையே; எவரேனும் வருந்தினால் மன்னிக்க; இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்)
எனினும், அவன் பண்டைத் தமிழ் அடையாளங்கள் தேய்ந்து விடாமல்…
இலக்கியத்திலும்/பதிவிலும்… தமிழோடு ஒன்றியே நின்று வருகின்றான்!

கையில் மலர் ஏந்திய ஒரே முருகன் ஆலயம் = செந்தூர்;

அவன் மேனி, கரும் பாறையாய் இல்லாது…
வெண்மை-கருமை கலந்த, மாக்கல் போல் வரி வரியாய்… திருமுழுக்கிலே காணலாம்;
* ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை ஒய்யாரம்!
* பின் கையில் குறு வேற் படையும், மணி மாலையும்!

அவன் முகமும் முறுவலும், அவன் மார்பும் மறைப்பும்..
பிறந்த மேனியாய் நிற்கும் காதலனைக் கண்ட பின்..
என் அமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!

Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp