Copy
நம் நாடு (கோலாலம்பூர்) 12-08-2012: பகுதி 2
Sri Valli-Teyvanai Samedha Murugan

ஆலயங்கள் சமயக் கூடங்களாக உருமாற வேண்டும்

கோலாலம்பூர் : இந்து ஆலயங்கள் இனி சமயக் கல்வி தருணம் கூடங்களாக உருமாற வேண்டும். சமய போதனைகள் எல்லா ஆலயங்களிலும் இருப்பதை ஆலய நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மஇகா தேசிய தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் கூறினார்.

இந்துக்கள் மத்தியில் சமய வழிபாட்டுக்கள் குறைந்து விடவில்லை. மாறாக நமது நாட்டில் அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்து மக்களிடையே பக்தி வழிபாடு கூடிக்கொண்டே போகிறது என அவர் மேலும் கூறினார்.
1st Muruga Bhakti Conference, Kuala Lumpur
நேற்று இரவு 8.00 மணிக்கு திருவாக்கு திருப்பீடம் -மலாயப் பலகலைக் கழகம் இணைந்து நடத்திய அனைத்துலக முருக பக்தி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து அவர் உரையாடினார்.

முஸ்லிம் பள்ளி வாசல்களில் மதபோதனை நடத்தப்படுகிறது. இந்து ஆலயங்களிலும் மதப் போதனை தொடர்ந்து நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மலாய இந்து சங்கம் கண்காணிக்க வேண்டும்.

நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் இந்துக்களுக்கு வாரி வாரி வழங்குகிறார். சமீபத்தில் கோலசிலான்கூரில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சுமார் 10 லட்சம் வெள்ளியும், தண்ணீர்மலை தண்டபாணி ஆலயத்துக்கு 10 லட்சம் வெள்ளியும் வழங்கினார்.

Tambiran Swamigal and Balayogi Swamiji at 1st Muruga Bhakti Conferenceஅவர் பிரதமரான பிறகு கோடிக்கணக்கான வெள்ளியை அள்ளித் தருகிறார் என்றார் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்.

அரசாங்கம் இன, சமய இணக்கத்தை வளர்க்கும் ஆட்சியைக் கொண்டுள்ளது. 64 ஆண்டுகளாக அரசாங்கம் சமய உணர்வைக் கட்டிக்காத்து வந்துள்ளது. மஇகா இந்த நாட்டில் இருக்கும்வரை இந்து சமயம் நிலைபெற்றிருக்கும் என்றார் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் பேரா மானில மஇகா டான்சி குமரன்.

முருகன் என்றால் தமிழ் என்று அர்த்தம். தமிழையும் முருகனையும் பிரித்துப் பார்க்க முடியாது. முருகனை நாம் வழிபடத் தவறி விட்டால் அது ரோமானிய நாட்டில் பெருகி விடும், அமெரிக்க நாட்டில் வளர்ந்து விடும் என்றார் மாநாட்டின் ஏற்பட்டாளரும் திருவாக்கு திருபீடத்தின் ஸ்தாபகருமான பாலயோகி சுவாமிகள். மாநாட்டுக்கு 50000 வெள்ளி நன்கொடை வழங்கிய டத்தோ ஸ்ரீ பழனிவேலுவுக்கும் , நன்கொடை அளித்த மற்றவர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

audience at 1st Muruga Bhakti conference, Kuala Lumpurமாநாட்டில் மலேய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஆர். தனேந்திரன், கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டத்தோ நடராஜா, தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பீ. சகாதேவன், மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், தமிழகத்தில் இருந்து வருகையளித்த தம்புரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

ரோமானியாவில் இருந்து பேட்ரிக் எரிங்டன் உட்பட 700 பேராரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக மாநாட்டின் ஏற்பாடுக் குழு இணை தலைவர் கண்ணா கூறினார். மாநாட்டின் தலைவராக மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் தலைமையில் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

Transcribed by: சாந்திப்பிரியா
 
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp