Copy
முருக பக்தி கையேடு--பகுதி 2
Sri Valli-Teyvanai Samedha Murugan

முருக பக்தி கையேடு

பகுதி 2

எழுதியவர்: பேட்ரிக் ஹரிகன்

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

21 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கும் முருக பக்தி மரபு உலகெங்கும் படர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும் தமிழர்களிலும் ஒரு சிறிய பிரிவினர் அதை இன்னமும் புரிந்து கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்த முருக பக்தர், முருக பக்தியின் தோற்றம், அதன் வரலாறு, தன்மை, மற்றும் பக்தி வழிபாடு போன்ற அனைத்தையும் 1970 ஆம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, இந்தக் கட்டுரை மூலம் அவற்றை விவரித்துள்ளார்.


இப்போது நாம் அதில் இருந்து சற்றே விலகி பக்தி மற்றும் பண்டைய கால குரு சிஷ்ய பரம்பரையின் வரலாறு, மன நிலை, போன்றவற்றை பார்க்கலாம். மேற்கு-கிழக்கு நாடுகளின் தன்மைகளைக் கொண்டவன் நான் என்றாலும், எப்படி முருக பக்தி தத்துவத்தை என்னுடைய வாழ்க்கை முறையில் மேற்கொண்டு அதை நான் இன்னமும் தொடர்ந்து கொண்டு வருகிறேன் என்பதை முதலில் கூறுகிறேன்.

பக்தி என்பது என்ன? அதை எப்படி கடைபிடிப்பது ?
பக்தி எனும் வார்த்தை சமிஸ்கிருத மொழி பேச்சின் வேர்ப் பகுதியில் இருந்து வந்துள்ளது. அதன் அர்த்தம் என்ன என்றால் பகிர்ந்து கொள்ளுதல் என்பது. ஆகவே பக்தி என்றால் பங்கேற்பது என்பதும் பொருளாகிறது. தம்முடைய இஷ்ட தெய்வத்தின், அதாவது தமக்கு தனித்துவமான தெய்வத்தின் மேன்மை மற்றும் அதன் உயர் தெய்விக உணர்வில் பங்கேற்பது என்பதே பக்தி என்பது . ஆகவே ஒரு பக்தன், ஏற்றுக் கொண்டுள்ள தனிப்பட்ட தெய்வத்தை அவன் வணங்கி, போற்றி, பூஜித்து வருவதும் இல்லாமல் அதன் உயர் தெய்விக உணர்வில் தீவீரமாக பங்கேற்பதும் ஆகும்.

எவன் ஒருவன் பக்தி மார்கத்தில் அல்லது பக்தி வழிமுறையில் செல்கின்றானோ, அவனே முழுமையான கடவுள் பற்றுக் கொண்டு பக்தி யோகம் அல்லது பக்தி சாதனாவை செய்பவன் ஆவான். இந்தக் கலி யுகத்தில் பக்தி யோகமே கடவுளை அடைய சிறந்த வழிமுறையாகும் . அறிவாற்றல் மழுங்கி, மனக் கிளர்ச்சியும், உணர்ச்சி வேகமும் மேலோங்கி உள்ள, ஓயாத சண்டை சச்சரவுகளைக் கொண்ட இந்த அகண்டத்தில் பக்தி மட்டுமே மனக் கிளர்ச்சிகளை அடக்கி ஒரே நிலையில் செல்லும் சாணம் பூட்டப்பட்ட குதிரைப் போல ஒரு தெய்வத்திடன் நம்மை இழுத்துச் செல்லும்.

ஆகவே இந்த தலைமுறையில் யோகாக்களில் மிக எளிமையானதும், பாதுகாப்பானதும், இயற்கை அம்சங்களைக் கொண்டதும் பக்தியோகம் மட்டுமே. அது மட்டும் அல்ல விறுப்பு மற்றும் வெறுப்பு என்ற புதை மணலில் புதைந்து விடாமலும், பாலைவனம் போன்று அறிவாற்றல் இல்லாதவர்கள் மத்தியில் சிக்கி மறைந்து விடாமலும் இருக்க இதுவே சிறந்த மார்கமாக உள்ளது .

பக்தி- சிறு வரலாறு
பண்டைய மற்றும் தற்கால அறிஞர்கள் ஒரு கருத்தில் ஒற்றுமையாக உள்ளார்கள். அவர்கள் அனைவரின் எண்ணப்படி, தமிழ் பண்பாட்டில்தான் பக்தி மரபு தோன்றி, மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இந்தியாவின் வட நாட்டுப் பகுதிகளில் இருந்த பண்டைய இந்துக்களை மட்டும் அல்ல ஜெயின், புத்த, பிற்காலத்து முகமதிய மற்றும் கிருஸ்துவ மதத்தினரிடமும் பக்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே பக்தி என்பது தமிழர்களின் ஒரு குறிப்பிடத்தக்க யோக வழிமுறை ஆகும்.

பக்தி யோகா என்பது பிராமணர்கள் கடைப்பிடித்து வந்த பண்டைய கால வேத நடை முறை சடங்குகளுக்கு மாறுபட்டு அமைந்த வழிமுறை. இதில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் சடங்குகளை செய்யாமல் அதே சமயத்தில் எளிய வழியில் மன நிறைவான முடிவை எட்ட முடிந்த வழி முறை பக்தி யோகா ஆகும். மேலும் பக்தி யோகத்தில் கிடைக்கும் சித்தி எனப்படும் பூரணத்துவத்தின் அளவு அவரவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இஷ்ட தெய்வத்திடம் அவரவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் மற்றும் தொடர்ப்புக்களின் தன்மையைப் பொறுத்தே அமைந்து இருக்கும்.

பொதுவாக தென் இந்தியாவின் பக்தி வழி, வட மானிலங்களில் கடைபிடிக்கப்படும் அமைதியான பக்தி வழிபாட்டில் இருந்து சற்று மாறுபட்டு உள்ளது. தென் இந்தியாவின் பக்தி வழிபாடு சில நேரங்களில் அவர்கள் பைத்தியக்காரர்களோ என்று நம்மை எண்ண வைக்கும் அளவில் உள்ளது. உடனே ஒரு நல்ல குருவை காண வேண்டியதின் அவசியத்தை அது எடுத்துக் காட்டுகிறது.

Muttu Irulaayi Ammaiyar and her guru at Tiruchendur ஒரு நல்ல குருவின் கடமை
வாழ்கையில் பெரும் அனுபவங்களை கொண்ட ஒரு குரு, நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் இருப்பவர். குரு என்பதற்கு சமிஸ்கிருத அடைமொழி அர்த்தம் என்ன என்றால் பலமானவர் என்பதே. ஆகவே குரு என்றால் தனிச் சிறப்பு வாய்ந்த, ஞான மையத்தை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளவர் என்று பொருள் கொள்ள வேண்டும். பல காலமாக இந்துக்கள், ஜெயின், புத்த மற்றும் ஆசியாவின் பல பாகங்களிலும் பரவி உள்ள இஸ்லாமியர்கள் போன்ற அனைத்து சமயங்களுக்குமே குரு எனப்பட்டவர் ஒரு மூல மையமாக இருந்துள்ளார். ஆனால் மேற்கத்தைய சமூகத்தினர் மற்றும் நாகாரீக வாழ்வில் உழல்பவர்களுக்கு அது அயல் கருத்தாகத் தோன்றலாம். அது குறித்து இங்கு முக்கியமான விளக்கத்தை தர வேண்டி உள்ளது.

தற்கால ஆன்மீக உலகில் தாமே ஆசான் என்று தமக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, விளம்பரங்கள் மூலம் ஆன்மீக போதனைகளை வியாபார கேந்திரங்களாக மாற்றி வருகிறார்கள். ஆனால் ஒரு குருவிடம் பலகாலம் பணிவிடை செய்து, அவரிடம் இருந்து முறையான வழிமுறைகளில் ஆன்மீக சாதனாக்களை நன்கு கற்றறிந்து உள்ளவரே ஒரு முறையான குருவாக அமைந்து இருக்க முடியும். அனைவருக்குமே உள்ளுணர்வில் ஆன்மீக பற்று உள்ளது. ஆனால் அதை நன்கு உணர்ந்து, அதன் ஆழ்கடலில் சென்று ஆத்ம ஞானம் பெறுவதற்கு, அப்படிப்பட்ட நிலையில் ஆழமாக இருந்து விட்டு வந்துள்ளவரின் துணையே தேவை.

குரு எனப்பட்டவர் பல வருட அனுபவசாலியான மருத்துவரைப் போன்றவர்தான். தம்மிடம் வந்துள்ளவர்களின் ஆன்மீக தாக்க நிலையை புரிந்து கொண்டு, மருந்துகளைக் கொடுத்து குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவது போல, ஆன்மீக தாக்கம் கொண்டுள்ளவர்களின் மன நிலைக்கு ஏற்ப அவர்களை பக்குவபடுத்தி ஆன்மீக வழிமுறைகளில் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும்.

ஒரே நிலை சாதனாக்கள் பலதரப்பட்ட ஆன்மீக தாக்கங்களுக்கும் தீர்வாக அமைவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மன நிலைக்கேற்ப ஆன்மீக தாக்கங்கள் மாறுபட்ட நிலையில் அமைந்து இருக்கும். அனைத்து நோய்க்கும் ஒரே மருந்து என்பதைப் போல அனைத்து ஆன்மீக தாகத்திற்கும் ஒரே நிலை சாதனாக்கள் என்று அதை போதிக்கும் அரைக்குறை ஞானிகளிடம் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Subramuniya Swami குரு பரம்பரை போன்ற தூய போதனா முறைகளில் போதிக்கப்படாமல், தம்மைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டு, ஆன்மீக உலகில் தான் தனித்தன்மை வாய்ந்தவராக அடையாளம் காட்டப்பட வேண்டும் என்ற அலைபாயும் எண்ணங்களுடன் வெளிவரும் குருமார்கள் ஆபத்தானவர்கள். அதை விட ஒருவருக்கு எந்த குருவும் இல்லாமல் இருப்பதே மேல். ஒரு முறையான குருவை அடையாளம் காண வேண்டும் என்றால் அவர்களது குரு பரம்பரையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவரது மேன்மையைப் பார்க்க வேண்டும் என்பது அவர்களை சுற்றி உள்ள மனிதர்களின் தொடர்ப்பை பார்ப்பது அல்ல, அந்த குரு எத்தனை வருடங்களாக இன்னொரு குருவிடம் ஆன்மீக சாதனாக்களை கற்றறிந்து உள்ளார் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு குருவை அடையாளம் காண வேண்டும் என்றால் அவர் சார்ந்திருந்த குருபரம்பரை மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பதல்ல அர்த்தம், தனது உணர்வுகள் அந்த குருவின் உணர்வுகளுடன் ஒத்து போகுமா என்பதையும் ஆராய வேண்டியது அவசியம் ஆகும். ஒருவர் தேடிச் செல்லும் குரு அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருப்பாரா, அவருடன் தனது ஆன்மீக உணர்வுகளை தயக்கம் இன்றி வெளிப்படுத்த முடியுமா என்பதை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட அளவில் உள்ளது.

செமிட்டிக் எனப்படும் இனஞ் சார்ந்த அதாவது யூதர்-பினீஷியர்-அராபியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினத்தை சார்ந்தவர்களைப் போல் அல்லாமல் இந்து சமயம் அல்லாத சனாதன தர்ம முறை எனப்படுவது ஒரே புனித மார்கத்தை, ஒரே குருவை, அல்லது வேறுபாடின்றி அனைத்து சமயத்தின் நம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கிக் கொண்டது அல்ல.

சனாதன தர்மம் என்பது எண்ணிலடங்காத, பல்வேறு ஆன்மீக மரபுகளை கொண்ட சமயப் பிரிவினர்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. கர்மா, மறுபிறப்பு, ஜாதி, வர்ணம் ( உப ஜாதிகள்), போன்றவற்றிலான நம்பிக்கை, மற்றும் வேதங்களே மேன்மையானவை என்பதை ஒப்புக் கொண்டு உள்ள நிலை போன்றவைதான் அவர்கள் அனைவரையுமே ஒன்றிணைத்து வைத்துள்ளது .

முருக பக்தி கொண்டவர்களில் சிலரையும் சேர்த்தே கூறுகிறேன், பண்டைய வம்சாவளி குருமார் பலரும், தம்மைப் பற்றி அடையாளம் காண முடியாத மறைவு நிலையில் இருந்து கொண்டு, ஆனால் புதுமையான வழிமுறைகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, திரை மறைவில் ஏழ்மையை வளர்த்து விட்டபடி இருக்க, மற்ற வழியினரோ பராம்பரிய வழி முறையிலான மரபைக் ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். உண்மையான ஆன்மீக ஆசான்கள் என்பவர்கள், குதிரையின் அலங்காரச் சேணங்களைப் போல தமது சமயத்தையோ, ஆன்மீகத் தன்மைகளையோ வெளிப்படுத்திக் கொண்டு இருக்காமல், தன்னை பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாமல், ஏன், ஒரு தொண்டர் கூட இல்லாமலும் கூட இருப்பார்கள். அட்டகாசமாக, அலை அலையாய் விழுகிற ஆன்மீக மேலங்கிகளை அணிந்து கொண்டு இருக்கும் குருமார் மட்டுமே இந்து சமய ஆன்மீகத்தை உண்மையாக பிரதிபலிப்பவர்கள் என்பது அர்த்தம் அல்ல.

உலகெங்கும் சமய மரபு முறைகள் எளிமையாகிக் கொண்டே சென்று , சமய முக்கியத்துவங்களும் கீழ் இறங்கிச் சென்று கொண்டு உள்ளது என்பதே தற்கால உலகின் நிலைபாடாக உள்ளது. இந்து சமயமும் மற்ற சமயங்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஆகவே சனாதன தர்ம வழி முறைகளில் உள்ள பிரிவுகளை நன்கு அறிந்து கொள்வது அவசியம்.

சத்சங் என்பது ஒரு ஆன்மீக ஆசானின் முன் அமர்ந்து கொண்டு அவருடைய சொற்பொழிவுகளின் மூலம் ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள விழையும் மக்கள் கூட்டம் நிறைந்து உள்ள இடம் ஆகும். அவரைப் பற்றிய பெருமைகள் முதலில் வாய் மொழி வார்தைகளினாலேயே பரப்பட்டு வந்திருக்கும். பண்டைய வழக்க முறைகளை தகர்த்தெறிந்து, சைவ உணவை மேற்கொள்ளுதல், ஆலய வழிபாடு மற்றும் கீர்த்தனைகளை செய்வது போன்றவற்றை துவக்க ஊக்குவிக்கும் முக்கியமான பிரசார உக்தியே சத்சங் போன்ற சொற்பொழிவுகள் அல்லது படங்கள் மூலம் அனைத்தையும் விளக்கிக் கூறுவது என்பன ஆகும். உலக வாழ்க்கையில் ஊறிக் கிடந்து, புதிய பாதையில் செல்ல விழைபவர்களுக்கு அப்படிப்பட்ட வழிமுறை மூலம் தரப்படும் போதனைகளை ஏற்றுக் கொள்வதற்கு வெகு காலம் பிடித்தாலும், ஆன்மீக வாழ்வில் அவர்கள் பாதம் வலிமையாகப் பதிந்திட அது வழிவகுக்கும்.

Subscribe to Murugan Bhakti newsletter
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp