Copy
ஒரு உன்னத ஆன்மீக அனுபவம
The Healing Power of Kandhar Andhadhi
View this email in your browser
ஒரு உன்னத ஆன்மீக அனுபவம்
A Divine Experience

சித்ரா மூர்த்தி

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள்; எனக்குத் திடீரென்று ஒரு செவி அடைத்துப் போய், பேசினால் காற்று மட்டும் வெளிவரும் அளவு குரலும் நின்றுவிட்டது. அடிக்கடி ஜலதோஷம் வந்து முழுவதுமாக மருந்து எடுத்துக் கொள்ளாததன் விளைவாக, செவிப்பறைக்கும்  தொண்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் சளி இறுகி விட்டது என்றும், கேட்கும் திறன் 30 விழுக்காடு குறைந்து விட்டது என்றும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். திருப்புகழ் முதலான நூல்களைக் கற்றும், கற்பித்தும், அவை பற்றி மேடையில் பேசியும் வரும் எனக்கு இது பேரிடியாக இருந்தது.

எனது குருநாதர் திருப்புகழ் அடிமை திரு. எஸ். நடராஜன், மற்றும் அவரது மாணவி திருமதி லக்ஷ்மி ராமன் ஆகியோரிடமிருந்து நான் அருணகிரிநாதரின் 'கந்தர் அந்தாதி' நூலைக் கற்று வந்த நாட்கள் அவை.குருநாதரிடம் என் வருத்தத்தைக் கூறியபோது கந்தர் அந்தாதி 26ஆம் செய்யுளைப் பாராயணம் செய்ய வேண்டியது தானே என்று சுலபமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதன்படியே பாராயணம் செய்யத் துவங்கினேன்; ஒரு சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பின் கேட்கும் திறனும், குரலும் முற்றிலுமாகச் சரியாகி விட்டது. இன்றளவும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மருத்துவர்களின் முயற்சியோடு, கந்தர் அந்தாதிப் பாராயணமுமே இதற்கு முக்கிய காரணம் என்று நம்புகிறேன். அந்தச் செய்யுளைப் பொருள் விளக்கத்துடன் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

            அருணகிரிநாதர் அருளிச் செய்த

               'கந்தர் அந்தாதி' - செய்யுள் எண் 26

   செவிக்குன்ற  வாரண  நல்கிசை பூட்டவன்  சிந்தையம்பு

   செவிக்குன்ற  வாரண   மஞ்சலென்றாண்டது.  நீண்ட கன்மச்

   செவிக்குன்ற  வாரண  வேலாயுதஞ்செற்ற துற்றனகட்

   செவிக்குன்ற  வாரண  வள்ளிபொற்றாண்மற் றென்றேடுவதே.

பதப்பிரிவு:

செவிக்கு உன் தவா ரண நல்கு இசை பூட்ட, வன்சிந்தை

அம்பு, செ, வி, குன்ற, வாரணம் அஞ்சல் என்று ஆண்டது

நீண்ட கன்ம செ இக்குன்று அவா, ரண வேலாயுதம் செற்றது

உற்றன, கட் செவி குன்ற, வாரண வள்ளி பொற்றாள், மற்றென் தேடுவதே!

 

கட் செவி குன்ற             -  நாகாசல வேலவனே

                               [நாகாசலம் - திருச்செங்கோடு]

செவிக்கு                    -  என் காதிற்கு

உன் தவா ரண நல்கு         - உனக்கும் எனக்கும் நீங்காத தொடர்பை

                              ஏற்படுத்திக் கொடுக்கும்

இசை பூட்ட                 - உனது திருப்புகழை ஆபரணமாக அணிந்து கொள்ள

வன் சிந்தை                - வலிய என் இதயமாகிய

அம்பு - செ - வி - குன்ற   - செந்தாமரையில் இருக்கும் ஜீவாத்மா எனும் பட்சி,

                             (இல்லற துன்பத்தில்) நடுங்கும் பொழுது

 

வாரணம்                   - உன்னுடைய கொடியில்(கையில்) உள்ள சேவல்

                            [திருச்செங்கோட்டில் மட்டும் முருகன் சேவற்பட்சியைக்

                            கையில் பிடித்திருக்கிறான்]

அஞ்சல் என்று ஆண்டது    - பயப்படாதே என்று சொல்லி என்னை அடிமை கொண்டது

நீண்ட கன்ம               - [முன்பு செய்த] மிகப் பெரிய வினையால் விளையும்

செ இக்குன்று அவா        - ஜனனத்திற்கு விதை ஆகிய மலை போன்ற

                            ஆசைக் கூட்டத்தை

ரண வேலாயுதம்          - போர் செய்யும் வல்லமை உள்ள உன் திருக்கை வேல்

செற்றது                  - தகர்த்து விட்டது.

உற்றன வாரண வள்ளி பொற்றாள் - உனது க்ரியா சக்தியாகிய தேவயானை, இச்சா சக்தியாகிய வள்ளி

                                  இவர்களின் சிறந்த திருவடிகள் என் சிரசின் மேல் வந்தமர்ந்தன.

மற்றென் தேடுவதே        - இனி நான் தேடிச் சம்பாதிக்க வேண்டியது என்ன உளது [ஒன்றும் இல்லை]

பொழிப்புரை

திருச்செங்கோட்டு வேலவனே! உன் திருப்புகழை நான் செவிமடுத்த உடன், உன் சேவல் என் ஆத்மாவை அபயம் கொண்டு ஆண்டது. உனது வேலாயுதம், பிறப்பிற்குக் காரணமான ஆசைகளை ஒழித்து விட்டது. உனது இரு தேவிமார்களின் திருவடி தீக்ஷையும் கிட்டியது .இனிமேல் நான் தேட வேண்டியது ஒன்றுமே இல்லை!

The Healing Power
of Kandhar Andhadhi

by Chitra Murthy

Translation
by Malathi Jayaraman
 
Two years ago, suddenly I became deaf from one year. When I opened my mouth to speak all that I could do was to let out air from my wind pipe. The doctor found due to repeated, untreated attacks of viral infection (cold), my hearing ability had gone down to seventy percent.
 
It dawned upon me that this could prove as a hindrance to my interests, namely learning, teaching and giving discourses on Thiruppugazh. I was shocked. Those were the days when I was learning Kandhar Andhadhi from Thiruppugazh Adimai Shri S. Natarajan and Mrs Lakshmi Raman.
 
I felt miserable and shared my plight with my teacher Shri S. Natarajan. He nonchalantly remarked it would do me well to recite the 26th verse of Kandhar Andhadhi.
 
I followed his advice and began to chant that 26th Kandhar Andhadhi daily. By God's grace all it took was a minor surgery to rectify my vocal and aural ailments.
 
As of today the problems have never recurred. I believe that my recital of that Kandhar Andhadhi was the main reason behind my ailments vanishing without giving me much trouble.

 
I am sharing that Kandhar Andhadhi verse and its meaning with you all.

Concise meaning of this Kandhar Andhadhi verse 26:
 
Oh Lord of Thiruchengodu!

The moment I heard your glory 'Thiruppugazh' your rooster gave me refuge and converged me in your divine grace.
 
Your spear annihilated my worldly desires which are the cause for rebirth in this world of delusion.
 
I am showered with the grace of the hallowed feet of your two consorts, Valli and Deivayanai.
 
Above all this, I no longer need to search for anything else in this mortal world.

 


சித்ரா மூர்த்தி

Chitra Murthy

A1, Limelight Apartments

S-14, MG Road

Sastri Nagar, Chennai -600020

chitramurthy@hotmail.com

Malathi Jayaraman:  malthijayaraman@gmail.com

Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp